புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் ஆண்டனியை வம்புக்கு இழுக்கும் மண்ட கோளாறு.. மொத்தமாய் சோலி முடிக்க காத்திருக்கும் சலீம்

Vijay Antony: விஜய் ஆண்டனி கைவசம் தற்போது பல படங்கள் உள்ளது. சமீபத்தில் கூட இவருடைய நடிப்பில் வெளியான ரோமியோவுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

ஆனால் ப்ளூ சட்டை மாறன் அவரை வம்பு இழுக்கும் விதமாக படத்தை கண்டபடி கிண்டல் செய்து இருந்தார். அது மட்டுமல்லாமல் விஜய் ஆண்டனி ஒரே மாதிரி எக்ஸ்பிரஷன் கொடுக்கிறார் என கலாய்த்து இருந்தார்.

இதற்கு விஜய் ஆண்டனியும் தகுந்த பதிலடி கொடுத்தார். ஆனாலும் இந்த பிரச்சனை இன்னும் முடிந்த பாடில்லை. அதில் தற்போது ப்ளூ சட்டை, விஜய் ஆண்டனியை கலாய்த்து ஒரு ட்வீட் போட்டு இருக்கிறார்.

ப்ளூ சட்டையின் வன்மம்

அதில் தொடர்ந்து தன்னுடைய படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் அடுத்த படத்திற்கு ரீ ரிலீஸ் என டைட்டில் வைக்க ரோமியோ நடிகர் நினைத்திருந்தார்.

blue sattai maaran
blue sattai maaran

ஆனால் அதற்கு முன்பே கள்வன் நடிகர் அந்த டைட்டிலை பதிவு செய்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஜிவி பிரகாஷையும் சேர்த்து அவர் கலாய்த்து தள்ளியுள்ளார்.

ஆனால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்து கொண்டிருக்கிறது. விஜய் ஆண்டனி இப்போதுதான் தன்னுடைய சொந்த பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து நடிப்பில் கவனம் செலுத்துகிறார்.

அவரை எதற்காக தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருக்கிறீர்கள்? அப்படி என்ன உங்களுக்கு வன்மம்? என ரசிகர்கள் ப்ளூ சட்டையை வறுத்து எடுத்து வருகின்றனர்.

Trending News