செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

திரைத்துறைக்கு இந்த மாற்றம் அவசியம்.. உதாரணம் காட்டிய விஜய் சேதுபதி

தமிழில் ஹீரோவாக மட்டுமல்லாமல் முதியவர், திருநங்கை, வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பின்னிப் பெடல் எடுத்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்திற்கு பிறகு விக்ரம் படத்தில் தனது வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருக்கிறார் .

விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆன நாள் முதல் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் இவர்களுடன் திரையில் சில நிமிடம் மட்டுமே தோன்றினாலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவை பலரும் பாராட்டுகின்றனர்.

இந்நிலையில் மாமனிதன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை குறித்து முதல் முதலாக மனம் திறந்திருக்கிறார். விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ், ரோலக்ஸ் கதாப்பாத்திரத்திற்கு பல நடிகர்களை தேடிக்கொண்டிருந்தார்.

அதன்பிறகு விக்ரம் படம் வெளியாகும் சில வாரங்களுக்கு முன்னர்தான் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கப்போவது உறுதியானது. தமிழ் சினிமாவில் பெரிய மாஸ் ஹீரோவாக வலம் வரும் சூர்யா இந்த ரோவில் நடிக்கப்போவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஆனால் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பெரிய நடிகர்கள் இது போன்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஏற்று நடிப்பது திரைத் துறையில் ஏற்பட்டிருக்கும் பெரிய மாற்றம் என்று சூர்யாவை பாராட்டியிருக்கிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் மேரி கிறிஸ்மஸ், மைக்கல், விடுதலை, மும்பைகாரர் போன்ற படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அட்லீ இயக்கும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் படத்திலும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்திலும் விக்ரம் சேதுபதி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News