ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

6 பேர்ல ஒரு விக்கெட் அவுட்.. அவசரமாக நடந்த பிக்பாஸ் எவிக்ஷன், அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர்தான்

Biggboss 7 Eviction: ஒட்டுமொத்த ரசிகர்களும் பிக்பாஸ் சீசன் 7 எப்போது முடியும் என ஆவலாக காத்திருந்தனர். அதற்கு தற்போது நேரம் வந்திருக்கிறது. அதன்படி அர்ச்சனா, மாயா, மணி விஷ்ணு, தினேஷ், விஜய் வர்மா ஆகியோர் பிக்பாஸ் இறுதிப் போட்டி வரை வந்துள்ளனர்.

இதில் இந்த வார நடுவில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என ஏற்கனவே கணிக்கப்பட்டது. அதன்படி தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு விஜய் வர்மா அதிரடியாக வெளியேறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் முரட்டுத்தனமான போட்டியாளராக இருந்த இவருக்கு மஞ்சள் ஸ்ட்ரைக் கார்ட் கிடைத்தது.

மேலும் ஆண்டவரும் இவரை கடுமையாக வார்ன் செய்திருந்தார். அதை அடுத்து வைல்ட் கார்டாக மீண்டும் வீட்டுக்குள் வந்த இவர் கொஞ்சம் கவனமாகவே தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்தார். போகப் போக மாயா கூட்டணியின் ஒரு முக்கிய நபராகவும் மாறினார்.

Also read: காயம் பட்ட சிங்கத்தின் கர்ஜனை.. நிக்சனை பழி தீர்க்க காத்திருக்கும் வினுஷா

பல இடங்களில் மாயாவுக்கு சாதகமாக இவர் நடந்து கொள்வது வெளிப்படையாகவே தெரிகிறது. அது விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். உறுதிப்படுத்தப்பட்ட இந்த தகவலை அடுத்து மேலும் ஒரு எவிக்ஷன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அது மாயாவாக இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. எப்போதோ வீட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட வேண்டிய இவர் இன்னமும் விளையாட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் கமலும் விஜய் டிவியும் என்பதை மறுக்க முடியாது. அவர்களின் சப்போர்ட்டில் இருக்கும் மாயா இறுதி மேடை வரை வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

Also read: உன் போதைக்கு நா ஊறுகாவா.? அர்ச்சனாவின் சாயத்தை வெளுத்த கண்ணம்மா

Trending News