சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

குருட்டு அதிர்ஷ்டத்தில் எஸ்கேப்பான சாச்சனா.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய டம்மி பாவா

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வார ஆரம்பத்தில் இருந்து சண்டையும் பஞ்சாயத்துமாக இருந்தது. தீபக் தலைமையில் இயங்கிய வீடு ஒரு நாளைக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தது.

அவரும் முடிந்த அளவு பொறுமையாக இருந்து சமாளித்தார். ஆனால் நேற்றைய தினத்தில் எரிமலை எப்படி வெடிக்கும் என்ற கதையாக மஞ்சரியுடன் வீட்டிலிருந்த அனைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதில் தீபக் பொறுமை இழந்த நிலையில் நிதானம் தவறி வார்த்தையை விட்டார். உடனே அது தான் சாக்கு என மஞ்சரி கேப்டன் பதவியை பறிப்பதற்கு ரோஜா பூவை வெட்டி எறிந்தார். இப்படி ரணகளமாக சென்ற நிகழ்ச்சியின் வார இறுதி இன்று வந்துள்ளது.

இன்று விஜய் சேதுபதி விசாரிப்பதற்கு ஏகப்பட்ட கேஸ் இருக்கிறது. அதே சமயம் இந்த வாரம் வீட்டை விட்டு சச்சனா வெளியேறுவார் என அனைவரும் நம்பிக் கொண்டிருந்தோம். ஏனென்றால் ஓட்டு நிலவரம் படி அவர் கடைசி இடத்தில் இருந்தார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

ஆனால் இந்த சில்வண்டு இருந்தால்தான் வீட்டில் பிரச்சனை வெடிக்கும் என பிக் பாஸுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் கடைசி நேரத்தில் அவரை வீட்டில் வைத்துக்கொண்டு சிவகுமாரை வெளியேற்றி விட்டார்.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி சிவகுமார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சி தான். நேற்று வரை கடைசி இடத்தில் இருந்த சாச்சனா எப்படி தப்பித்தார்.

கடைசியில் பிக் பாஸ் வேலையை காட்டி விட்டாரே என கமெண்ட் வந்தாலும் சிவகுமாரின் வெளியேற்றம் கூட சரிதான். ஏனென்றால் அவர் வந்த நாளிலிருந்து பெரிதாக எந்த சம்பவமும் செய்யவில்லை.

அவருக்கான வாய்ப்பு கிடைத்தும் கூட டம்மி பாவா ரேஞ்சுக்கு தான் இருந்தார். ஆனால் இந்த வாரம் தான் ஒரு சில இடங்களில் அவரும் முன்வந்து சண்டை போட்டு தன்னுடைய இருப்பை காட்டிக் கொண்டார்.

ஆனாலும் ராஜதந்திரங்கள் வீணாகி விட்டது.. தற்போது அவர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அடுத்த வாரம் ஆடியன்ஸின் டார்கெட் சாச்சனா மற்றும் மஞ்சரி தான். ஆனால் இதிலும் பிக் பாஸ் வேலையை காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Trending News