ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் அழுமூஞ்சி.. ஹவுஸ் மேட்ஸ் இனிமேதான் ஹேப்பி அண்ணாச்சி

Biggboss 8: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரம் வர்ஷினி வெளியேறியிருந்தார். அதை அடுத்து இந்த வாரம் 10 பேர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். இதில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது.

அதேபோல் ஆடியன்ஸின் ஒட்டுமொத்த டார்கெட்டும் ஒருவர் தான். அவர் வீட்டை விட்டு வெளியேறினாலே நிகழ்ச்சி நன்றாக இருக்கும். பார்வையாளர்களும் டென்ஷன் இல்லாமல் இருப்பார்கள் என்பது அனைவரின் கருத்து.

அப்படி அனைவரையும் எரிச்சலூட்டும் நபர் தான் சாச்சனா. எதற்கெடுத்தாலும் அழுது கத்தி சண்டை போடுவது, சாப்பாடு விஷயத்தில் பிரச்சனை செய்வது இதுதான் இவருடைய முக்கிய வேலையாக இருக்கிறது.

அதிலும் மெச்சூரிட்டி இல்லாமல் இவர் செய்யும் பல விஷயங்கள் ரசிக்கும் படியாக இல்லை. இதை கடந்த வாரமே விஜய் சேதுபதி நாசுக்காக விசாரித்த நிலையில் ஓ என ஒப்பாரி வைத்து சீன் போட்ட கதை எல்லாம் சொல்லி மாளாது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் சாச்சனா

அதன்படி இந்த வாரம் வசமாக நாமினேஷனில் சிக்கி இருக்கும் அவர் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்த வார ஓட்டிங் நிலவரப்படி ஜாக்லின் தான் அதிக ஓட்டுக்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

voting
voting

அவருக்கு அடுத்தபடியாக அன்ஷிதா, விஷால், ரயான், மஞ்சரி, சத்யா, ரஞ்சித், சிவகுமார், ஆனந்தி ஆகியோர் உள்ளனர். இதில் நம் லிட்டில் பிரின்சஸ் 4.62% ஓட்டுக்களை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார்.

voting-bb8
voting-bb8

வார இறுதிக்கு இன்னும் சில நாட்கள் இருந்தாலும் சாச்சனா நிச்சயம் வெளியேறுவார் என தெரிகிறது. அது மட்டும் நடந்து விட்டால் பார்வையாளர்களை விட வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தான் சந்தோஷப்படுவார்கள்.

ஏனென்றால் இந்த வார நாமினேஷனில் இதுக்கு மேலும் இவரை வச்சு பார்த்துகிட்டு இருக்க முடியாது என தீபக் கூறி இருந்தார். உண்மையில் அது சரியான காரணம் தான். இவரால் வீட்டில் இருக்கும் பல பேர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். அதனால் இவர் வெளியேறுவது தரமான சம்பவம் தான்.

Trending News