வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பிக்பாஸ் நாமினேஷனில் சிக்கிய 11 போட்டியாளர்கள்.. மூட்டை முடிச்சை கட்ட போகும் நடிப்பு மன்னன்

Biggboss 8: பிக்பாஸ் 8 நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து 11 வது வாரத்தில் இருக்கிறது. இன்னும் சில வாரங்கள் மட்டுமே பைனலுக்கு உள்ளது.

அதனால் டாஸ்க்குகள் போகப்போக கடுமையாக இருக்கும். இதில் போட்டியாளர்கள் திறமையையும் புத்தி கூர்மையையும் காட்ட வேண்டும்.

அதேபோல் தகுதி இல்லாதவர்கள் இறுதிப் போட்டிக்கு சென்று விடக்கூடாது. அதனால் பிக்பாஸ் ஆடியன்ஸ் நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்து ஓட்டு போட்டு வருகின்றனர்.

அதில் கடந்த வாரம் சத்யா, தர்ஷிகா இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். அதை தொடர்ந்து இந்த வாரம் 11 போட்டியாளர்கள் நாமினேஷனில் உள்ளனர்.

நாமினேஷனில் சிக்கிய 11 போட்டியாளர்கள்

அவர்களில் முத்து வழக்கம் போல அதிக ஓட்டுக்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் சௌந்தர்யா பாதிக்கு பாதி ஓட்டுகளை பெற்றுள்ளார்.

அடுத்ததாக ஜாக்லின், அருண், ராணவ், பவித்ரா, தீபக், அன்சிதா, மஞ்சரி ஆகியோர் உள்ளனர். கடைசி இரண்டு இடத்தில் ரயான் ரஞ்சித் ஆகியோர் உள்ளனர்.

இதில் ரஞ்சித் முதல் வாரத்தில் இருந்து இப்போது வரை பிக்பாஸ் வீட்டில் பெரிதாக சம்பவம் எதுவும் செய்யவில்லை. ஒரு கைதேர்ந்த நடிகனாக தன்னை காட்டிக் கொண்டுள்ளார்.

ஆனால் அவருடைய போலியான முகம் கழண்டுவிட்டது. இதற்கு மேலும் அவர் வீட்டில் தாக்குப் பிடிக்க முடியாது. அதனால் இந்த வாரம் அவர்தான் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்.

biggboss 8
biggboss 8

இதுதான் பார்வையாளர்களின் விருப்பமும் கூட. மேலும் இந்த வாரமும் இரண்டு பேர் வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Trending News