சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

இந்த வாரம் பிக்பாஸ் விரட்டி விடப்போகும் மொக்க பீஸ்.. 42% வாக்குகளை சூறையாடிய கில்லி, சூடு பிடிக்கும் ஓட்டிங்

Biggboss 7 Voting: கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எதிர்பாராத நாமினேஷன் நடந்தது. நடுவாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து வார இறுதியில் கூல் சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறினார். இப்படியாக பல திருப்பங்கள் நடந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் மூன்று போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர்.

அதன்படி விசித்ரா, ரவீனா, சரவண விக்ரம் ஆகியோர் நாமினேஷனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இதில் வழக்கம் போல பிக்பாஸ் ராஜமாதாவான விசித்ராவுக்கு 42 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கிறது. இது எதிர்பார்த்தது தான் என்பதால் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

Also read: இந்த வார நாமினேஷனில் சிக்கிய 3 போட்டியாளர்கள்.. மூட்டை முடிச்சை கட்ட போகும் சூனிய பொம்மை

ஏனென்றால் பிரதீப் வெளியேற்றத்திற்கு பிறகு இந்த நாமினேஷன் ஓட்டுக்களை அதிக அளவில் சூறையாடியது விசித்ரா, அர்ச்சனா மட்டும்தான். அவர்களுக்குத்தான் ரசிகர்களின் அமோக ஆதரவு இருக்கிறது. அதனால் இந்த வாரம் ராஜமாதா காப்பாற்றப்பட்டு விடுவார்.

ஆனால் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கும் ரவீனா, விக்ரமுக்கு இடையே நிறைய வாக்கு வித்தியாசம் இருக்கிறது. அதில் ரவீனாவுக்கு 68,909 வாக்குகள் கிடைத்திருக்கிறது. அதேபோல் விக்ரமுக்கு 45,352 வாக்குகள் தற்போதைய நிலவரப்படி கிடைத்துள்ளது.

Also read: பிரதீப்பிற்கு பின் மொத்தமாய் படுக்க இருந்த பிக்பாஸ்.. டிஆர்பியை தூக்கி நிறுத்தியது யாரு தெரியுமா?

இதை வைத்து பார்க்கும் போது பிக்பாஸ் குட்டிச்சாத்தான் ரவீனா இந்த வாரம் வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. ஆனால் இவரை துரத்த வேண்டும் என்பதுதான் ஆடியன்ஸின் விருப்பம். ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் நடந்த பல குழப்பங்களுக்கு இந்த பேய் குழந்தை தான் காரணம்.

ஆனால் விஜய் டிவி எப்படியும் இவரை வெளியேற்ற மாட்டார்கள் என்பது தெரிந்த கதைதான். அதன்படி இந்த வாரம் டைட்டில் வின்னர் சரவண விக்ரம் தான் வெளியேற இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து மாயா கூட்டத்திற்கு ஜிங் ஜாங் போட்டு வந்த விக்ரம் இவ்வளவு நாட்கள் வீட்டில் இருந்ததே உலக அதிசயம் தான்.

biggboss-voting
biggboss-voting

Trending News