வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

5 வாரம், 13 போட்டியாளர்கள்.. பிக் பாஸ் டைட்டிலை தட்டித் தூக்கப் போவது இவர் தான்

Biggboss 7 Title Winner: இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. எப்படியாவது அந்த டிக்கெட்டை வாங்கி ஃபைனலுக்கு நேரடியாக செல்ல வேண்டும் என போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் இத்தனை வாரங்களாக விளையாட்டில் கவனம் செலுத்தாமல் சொந்த விருப்பு வெறுப்புகளை மட்டுமே காட்டி வந்தனர். அதனாலேயே இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்று கணிக்க முடியாமல் ஆடியன்ஸ் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

அதன்படி நிகழ்ச்சி முடிய இன்னும் 5 வாரங்களே இருக்கிறது. தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். இதில் அதிக கவனம் ஈர்த்த போட்டியாளர்கள் என்று பார்த்தால் மாயா, பூர்ணிமா, விசித்ரா, அர்ச்சனா தான். இதில் மாயாவுக்கு தான் ஒட்டுமொத்த வெறுப்புகளும் கிடைத்திருக்கிறது. ஆனாலும் இவருடைய கேம் பிளானை பாராட்டும் ரசிகர்களும் இருக்கின்றனர்.

Also read: சேத்துலயும் அடி வாங்கியாச்சு சோத்துலயும் அடி வாங்கியாச்சு.. திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறும் ஆண்டவர்

அதேபோல் பிக்பாஸ் ராஜமாதாவாக கொண்டாடப்பட்டு வரும் விசித்ராவுக்கும் ஏகப்பட்ட சப்போர்ட் இருக்கிறது. சொல்லப்போனால் 50 வயதில் ஒரு போட்டியாளர் இத்தனை வாரங்கள் கடந்தது இதுவே முதல்முறை.

அதை அடுத்து அர்ச்சனா ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டு வந்தாலும் இப்போது சில வெறுப்புகளையும் சம்பாதித்துள்ளார். அதேபோல் பூர்ணிமாவும் நெகட்டிவாக தான் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். இந்த நால்வரில் மாயா, விசித்ரா இருவரில் ஒருவருக்கு இந்த டைட்டில் போக அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதில் கமலுடைய ஆதரவு மாயாவுக்கு தான் என்பது ஊர் உலகம் அறிந்தது தான். அதனால் மக்களின் ஓட்டுக்கள் மாயாவுக்கு சாதகமாக இல்லை என்றாலும் விஜய் டிவி ஏதாவது ஒரு தில்லுமுல்லு செய்துவிடும். அந்த வகையில் இந்த சீசன் டைட்டில் வின்னர் மாயாவா, விசித்ராவா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்.

Also read: நாட்டாமை தீர்ப்பு அவருக்கே ஆப்பு.. கமலை ஓரங்கட்டி பிக்பாஸை நடத்த 5 பிரபலங்களுக்கு வலை வீசும் விஜய் டிவி

Trending News