வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

இதுக்கு மேலயும் பிக்பாஸ்ல குப்ப கொட்ட முடியாது.. 16 லட்சத்தோடு நடையை கட்டிய பீனிக்ஸ் பறவை

Biggboss 7: கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் வீடு பெரும் பரபரப்பாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் வீட்டுக்குள் வைத்திருக்கும் பணப்பெட்டி தான். விளையாட்டை இத்தோடு முடித்துக் கொள்ள விரும்புவர்கள் அதை எடுத்துக்கொண்டு வெளியேறலாம்.

அதன்படி ஒரு லட்சம் 5 லட்சம் 10 லட்சம் என உயர்ந்த தொகை காலையில் 12 லட்சம் வரை இருந்தது. அதைத்தொடர்ந்து இப்போது பணப்பெட்டியின் மதிப்பு 16 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. இதற்கு மேலும் தாமதித்தால் யாராவது தூக்கி விடுவார்கள் என்று பயந்து பணப்பெட்டியை எடுத்திருக்கிறார் அராத்தி.

அதன்படி பூர்ணிமா தற்போது பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு நடையை கட்டியிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் எப்படியும் நமக்கு டைட்டில் கிடைக்காது. இனிமேலும் இந்த வீட்டிற்குள் குப்பை கொட்ட வேண்டாம் என அவர் நினைத்திருக்கலாம்.

Also read: ஓட்டிங்கில் அர்ச்சனாவுக்கு டஃப் கொடுக்கும் போட்டியாளர்.. போற போக்க பாத்தா டைட்டில் வின்னர் ஆயிடுவார் போலையே!

அதனாலேயே தற்போது அவர் பணப்பெட்டியை எடுத்திருக்கிறார். ஆனால் இதற்கு முன்னதாக பிக் பாஸ் டீமில் இருந்து தினேஷ், விஜய் வர்மா ஆகியோரை பெட்டியை எடுக்க வைக்க பிளான் போட்டிருக்கின்றனர். ஆனால் இப்போது பூர்ணிமா இதை தட்டி தூக்கி இருக்கிறார்.

ஆனால் எப்படி இருந்தாலும் இது அனைத்துமே ஸ்கிரிப்ட் தான். அதன்படி இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பது கூட இப்போது விஜய் டிவியில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது அர்ச்சனா ஓட்டு நிலவரத்தில் முன்னணியில் இருக்கிறார்.

ஆனாலும் ஒரு ட்விஸ்ட் வைக்க சேனல் தரப்பு முடிவு செய்து இருக்கிறதாம். அதன் முதற்கட்டமாக பணப்பெட்டியில் எதிர்பாராத திருப்பம் நடந்துள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இத்தனை நாட்கள் தாக்குப்பிடித்த பீனிக்ஸ் பறவை தற்போது 16 லட்சத்தோடு பறந்துள்ளது.

Also read: 95 நாளில் 8 போட்டியாளர்களின் சாதனைகள்.. பிக்பாஸில் 9 முறை நாமினேஷன் வந்தும் எஸ்கேப் ஆன தெய்வத்தாய்

Trending News