வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேற போகும் செட் ப்ராப்பர்டி.. இணையத்தை கலக்கும் ஓட்டிங் லிஸ்ட்

Biggboss 7 Voting: கடந்த வாரம் பிக்பாஸ் வீடு உக்ரமாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்தது. அதை வார இறுதியில் ஆண்டவர் ஓரளவுக்கு குறைத்தார். அதைத் தொடர்ந்து இந்த வாரம் பெரிய அளவில் சர்ச்சைகள் இல்லாமல் சாதாரணமாகவே சென்று கொண்டிருக்கிறது.

இப்படியே சென்றால் இந்த வாரம் பேசுவதற்கு எந்த கன்டென்ட்டும் கிடைக்காதே என பிளான் போட்ட பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்க்கை கொடுத்தார். அதை தொடர்ந்து வீடு மீண்டும் பதட்ட நிலைக்கு வந்தது. மேலும் நேற்றைய எபிசோடில் தினேஷ் விஷ்ணுவின் சண்டை தான் உச்சகட்டமாக இருந்தது.

இப்படி சுவாரசியமாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதில் ஒரு சில யூகங்கள் இருந்தாலும் தற்போது அனைவரும் எதிர்பார்த்த நபர் தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். அதற்கான ஓட்டிங் லிஸ்ட் இப்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

Also read: பிரதீப் சோலிய முடிச்சாச்சு, அடுத்த பாயாசம் யாருக்கு.? வேட்டைக்கு தயாராகும் மாயா அண்ட் கோ

அந்த வகையில் இந்த வாரம் விசித்ரா, ரவீனா, மணி, ஆர் ஜே பிராவோ, பூர்ணிமா, அக்ஷயா, கானா பாலா, விக்ரம் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் அதிகபட்சமாக விசித்ராவுக்கு தான் ஓட்டுகள் கிடைத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரவீனா, மணி, பிராவோ, பூர்ணிமா ஆகியோர் கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளனர்.

இதில் கடைசி மூன்று இடம் அக்ஷயா, கானா பாலா, விக்ரம் ஆகியோருக்கு கிடைத்திருக்கிறது. அந்த வரிசையில் அக்ஷயா 10,379 ஓட்டுகளை பெற்றுள்ளார். கானா பாலா 10,059 ஓட்டுக்களை பெற்றுள்ளார். இதில் விக்ரமுக்கு கிடைத்திருக்கிறது. அதன்படி அவர் 10,030 பெற்றுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இது என்னடா டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை என பங்கம் செய்து வருகின்றனர்.

Also read: கமலுக்கு டேக்கா கொடுத்த ஹாட்ஸ்டார்.. தலையில் துண்டை போட்ட ஆண்டவர்

ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் எதற்கு இருக்கிறோம் என்று தெரியாமல் செட் ப்ராப்பர்ட்டி போல் இருக்கும் ஒருவர் இவராகத் தான் இருப்பார். அதனாலேயே பிக்பாஸ் கதவை மூடவாவது இவரை பயன்படுத்திக் கொள்வோம் என்று வேலை வாங்கி வருகிறார். இந்த சூழலில் இவர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவது நிகழ்ச்சியின் போக்கை எந்த விதத்திலும் மாற்றப் போவதில்லை.

bb7-voting
bb7-voting

Trending News