Biggboss 8: இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டெவில் தேவதை டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஓவர் பர்ஃபார்மன்ஸ் செய்த போட்டியாளர்களால் செம கன்டென்ட் கிடைத்தது.
ஒரே நாளில் ஆறு ப்ரோமோக்களை வெளியிடும் அளவுக்கு டிஆர்பியை தன் வசப்படுத்தியது விஜய் டிவி. அதை அடுத்து இன்று பெஸ்ட் பர்பாமன்ஸ் லிஸ்டில் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்கள் அடுத்த வாரம் கேப்டன் டாஸ்கின் பங்கேற்க முடியும். அதன்படி தீபக், ரஞ்சித், பவித்ரா, மஞ்சரி ஆகியோர் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் மஞ்சரி வருவார் என அவருடைய ரசிகர்கள் கூறி வந்தனர். அதேபோல் மீண்டும் தீபக் வரவேண்டும் என ஆடியன்ஸ் கருத்து தெரிவித்தனர்.
பிக் பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டன்
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு ட்விஸ்ட் வந்திருக்கிறது. அதாவது தற்போது நடந்த கேப்டன்சி டாஸ்கில் ரஞ்சித் வெற்றி பெற்றுள்ளார்.
பிக் பாஸ் வீட்டுக்கு வந்து கிட்டதட்ட ஒன்பது வாரங்கள் முடியப்போகிறது. ஆனாலும் ரஞ்சித்தின் ஒரிஜினல் குணம் எங்கேயும் வெளிப்படவில்லை.
ரொம்பவும் அமைதியாக தான் கேமை விளையாடுகிறார். ஆனால் அவருக்குள் ஒரு கோபம் முகமும் இருக்கிறது. அதை நிச்சயம் நாம் அடுத்த வாரம் காண முடியும்.
அது அவருக்கு சாதகமாக அமையவும் வாய்ப்பு இருக்கிறது ஆக மொத்தம் புது கேப்டன் தலைமையில் அடுத்த வாரம் வீடு எப்படி இருக்க போகிறது என பார்ப்போம்.