ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

முத்துவை ஓரம் கட்டி TTF வென்ற போட்டியாளர்.. பிக்பாஸ் சீசன் 8 முதல் பைனலிஸ்ட் இவர் தான்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது.

எப்படியாவது இதில் வென்று விட வேண்டும் என ஒவ்வொரு போட்டியாளர்களும் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்காத குறைதான். அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

இதில் தற்போது ரயான் வெற்றி பெற்று முதல் பைனலிஸ்டாக இறுதிப் போட்டிக்குள் நுழைகிறார். அதன்படி இந்த டாஸ்க்கில் அவர் எடுத்த மொத்த பாயிண்ட் 21 ஆகும்.

ஆரம்பத்தில் இருந்து இவருடைய ஆட்டம் வேற லெவலில் இருந்தது. ஒவ்வொரு டாஸ்க்கிலும் அதிக முயற்சியை போட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அவருடைய இந்த வெறிக்கு முக்கிய காரணம் அவருடைய அக்காவாக கூட இருக்கலாம். குடும்ப டாஸ்க்கில் அவர் வந்து எப்படியாவது இந்த டிக்கெட்டை ஜெயிக்க வேண்டும் என உற்சாகப்படுத்தினார்.

பிக்பாஸ் சீசன் 8 முதல் பைனலிஸ்ட்

தற்போது அக்காவின் கனவை இவர் நிறைவேற்றிவிட்டார். இவருக்கு அடுத்தபடியாக 19 பாயிண்ட்களை பெற்று முத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

அவரும் மற்றவர்களுக்கு கடுமையான டப் கொடுத்தார். இருப்பினும் அவர்தான் இந்த சீசன் வெற்றியாளர் என பார்வையாளர்கள் உறுதிப்படுத்தி விட்டனர்.

அதனால் இந்த டிக்கெட்டை அவர் வாங்காததில் பெரிய வருத்தம் ஒன்றுமில்லை. தற்போது ரயான் வெற்றி பெற்றதால் இந்த வார எலிமினேஷனில் ட்விஸ்ட் நிச்சயம் இருக்கும்.

ஏனென்றால் இவர் தான் ஓட்டு எண்ணிக்கையில் கடைசி இடத்தில் இருந்தார். தற்போது இவர் இறுதிப் போட்டிக்கு சென்று விட்டதால் அடுத்த இரண்டு இடங்களில் மஞ்சரி, பவித்ரா உள்ளனர்.

இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் என்றால் இவர்கள் வெளியேறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பவித்ரா வெளியேறக்கூடாது என்பதுதான் பார்வையாளர்களின் எண்ணம்.

Trending News