செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

விஜய் இடத்திற்கு தகுதியான ஒரே ஆளு இவர் மட்டும் தான்.. என்னடா இது இவ்ளோ காரணம் சொல்றாங்க.!

Vijay: விஜய் தீவிர அரசியலில் இறங்கப் போகிறார். தற்போது நடித்து வரும் கோட் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு இன்னும் ஒரு படத்தோடு சினிமாவை விட்டும் அவர் விலகப் போகிறார். அதனாலேயே இப்போது அவருடைய இடத்திற்கு தகுதியான ஆள் யார் என்ற விவாதம் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன், சூர்யா என ஆளாளுக்கு ஒரு பெயரை கூறி வைரலாக்கி வருகின்றனர். ஆனால் தனுஷ் தான் அதற்கு சரிப்பட்டு வருவார் என ரசிகர்கள் சில காரணங்களை முன்வைத்து வருகின்றனர். அதாவது இந்த ஒரு வட்டத்தில் தான் நான் நடிப்பேன் என்று இல்லாமல் தனுஷ் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ஒரு பக்கம் நடிகராகவும் மறுபக்கம் இயக்குனராகவும் இருக்கும் இவர் பாட்டு பாடுவது உள்ளிட்ட பன்முகத் திறமையோடும் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். அதேபோல் பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் விஐபி படத்தில் நடித்த இவர் திடீரென வயதான தோற்றத்தில் அசுரனாக விஸ்வரூபம் எடுத்தார்.

Also read: கூட்டாளி சம்பளத்தை கேட்டு வயித்தெரிச்சலில் 5 நடிகர்கள்.. குடிக்க மட்டுமில்ல குளிப்பதற்கும் பன்னீர் கேட்கும் தனுஷ்

இந்த வயதில் வளர்ந்த பையனுக்கு அப்பாவாக எந்த நடிகரும் நடிக்க முன்வர மாட்டார்கள். ஆனால் தனுஷ் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததால் தான் தேசிய விருதை தட்டி தூக்கினார். இப்படி நடிப்பில் பட்டையை கிளப்பும் இவர் கேங்ஸ்டர், வாத்தி, கேப்டன் மில்லர் என படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வருகிறார்.

தற்போது அவருடைய ஐம்பதாவது படமாக உருவாகி இருக்கும் ராயனுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மாஸ் இடத்தை அடைந்த தனுஷ் தான் விஜய் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்புவார் என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

ஆனால் இவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் சிம்புவின் 48வது படமும் வர இருக்கிறது. அதில் அவர் இதுவரை இல்லாத அளவுக்கு மாஸ் கெட்டப்பில் நடிக்க இருக்கிறார். அதற்கான பயிற்சிகளிலும் அவர் கடுமையாக ஈடுபட்டிருந்தார். இப்படி விஜய் இடத்திற்கு சிம்புவும் ஒரு போட்டியாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: அரசியல் எதிரியை தேர்ந்தெடுத்த தளபதி.. எதிராக கிளம்பிய விஜய் இணைய கூலிப்படைகள்

Trending News