வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

சூப்பர் ஸ்டாரை ஓவர் டெக் செய்திருக்கும் டாப் நடிகர்.. கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த ரஜினி

Super Star Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தை நடித்து முடித்திருக்கிறார். ரிலீஸுக்காக காத்திருக்கும் இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகள் இன்னும் சில நாட்களில் சூடு பிடிக்க போகிறது. இப்போது ரஜினி தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினிகாந்துக்கு இது சவாலான நேரமாக இருக்கிறது. ஏனென்றால் 80களில் இருந்து இப்போது வரை சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக நிற்கும் ஒரே நடிகர் உலக நாயகன் தான். அது இப்போது வரையிலும் தொடர்கிறது. ஆனால் சமீப காலமாகவே ரஜினிகாந்தை கமலஹாசன் பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறார்.

Also Read: ரஜினியை வைத்து படம் எடுக்க ஆசைப்படாத 5 வெற்றி இயக்குனர்கள்.. படையப்பாவில் ஒன்று சேர்ந்த கூட்டணி

ஏனென்றால் சமீபத்தில் கமலஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தை ரீ ரிலீஸ் செய்து ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. ஆனால் ரஜினியின் பிறந்தநாள் அன்று பாபா படத்தை கொஞ்சம் ட்ரிம்மிங் செய்து ரிலீஸ் செய்தனர். ஏற்கனவே வசூல் ரீதியாக பயங்கர ஃபிளாப் ஆன பாபா திரைப்படம், ரீ ரிலீசிலாவது கல்லாக கட்டும் என எண்ணினர். அதுவும் மண்ணைக் கவ்வியது.

ஆனால் கமலஹாசனை பொருத்தவரை அவர் கடைசியாக நடித்து ரிலீஸ் ஆன விக்ரம் படம் தாறுமாறாக வசூலை ஈட்டியது. அது மட்டுமல்லாமல் நான்கு வயதிலிருந்து தமிழ் சினிமாவில் ஊறிக்கிடக்கும் கமலுக்கு, இத்தனை வருடங்களாக இல்லாத பேரும் புகழையும் விக்ரம் படம் தான் பெற்று தந்தது.

Also Read: வெளிநாட்டில் செட்டில், ரஜினி கூப்பிட்டும் மறுத்த நண்பன்.. விஜய் சேதுபதிக்காக நடித்துக் கொடுத்த ஒரே படம்

அதைவிட பெருமை என்னவென்றால் விக்ரம் படம் தான் வசூல் ரீதியாகவும் தமிழகத்தில் நம்பர் ஒன் கலெக்சனில் இருக்கிறது. அதேபோல் ரீ ரிலீஸ் செய்த படங்களில் வேட்டையாடு விளையாடு கலெக்சன் தான் முதலிடத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ரஜினிக்கு இப்போது சவாலாக இருப்பது என்னவென்றால் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தின் கலெக்சன், விக்ரம் படத்தின் வசூலை முறியடிக்க வேண்டும்.

இது தான் இப்போது சூப்பர் ஸ்டாருக்கு பெரிய சவாலாக இருக்கிறது. மேலும் 72 வயதிலும் தன்னுடைய படங்களில் எந்த இளம் நடிகர்களையும் இணைத்துக் கொள்ளாமல் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் ரஜினி, இதே கெத்தோடு இன்னும் இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டு சினிமாவில் இருந்தே ஓய்வு பெற போகிறார்.

Also Read: போட்டி போட்டு பட்ஜெட் போடும் 2 பிரம்மாண்ட படங்கள்.. கமலால் பிச்சிக்கிட்டு போன வியாபாரம்

இப்படிப்பட்ட சூழலில் ஜெயிலர் படத்தின் மூலம்தான் கமலை பின்னுக்குத் தள்ள முடியும் என கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார். எனவே ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எண்ணம் ஈடேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News