செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அயலி பட அம்மாவா இது!. மாடர்ன் உடையில் கலக்கலாக வெளிவந்த புகைப்படம்

சமீபத்தில் வெளியான அயலி வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முத்துக்குமார் இயக்கத்தில் அபிநயாஸ்ரீ, அனுமோல், சிங்கம்புலி, காயத்ரி மற்றும் பலர் நடிப்பில் இத்தொடர் வெளியாகி உள்ளது. கடவுள் பெயரை சொல்லி பெண் பிள்ளைகளை வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்து வைப்பது தான் கதை.

ஆனால் இதில் அயலி மட்டும் இன்னும் பருவம் அடையவில்லை என்று ஊர் மக்கள் எல்லோரையும் நம்ப வைத்து படிக்கிறார். அது மட்டுமின்றி அந்த ஊரிலேயே முதலில் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் அயலி தான். இதில் அயலிக்கு உறுதுணையாக அவரது அம்மாவும் இருக்கிறார்.

Also Read : பிற்போக்குத்தனங்களுக்கு எதிரான சம்மட்டி அடி.. கவனம் ஈர்த்த அயலி ஒரு அழுத்தமான விமர்சனம்

அப்படி அயலியின் அம்மாவாக நடித்தவர் அனுமோல். இவர் தமிழ், மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் ஒரு நாள் இரவில் என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். மேலும் அயலி வெப் தொடரிலும் தனது சிறந்த நடிப்பை அனுமோல் வெளிப்படுத்தியிருந்தார். இதனால் இவருக்கு பட வாய்ப்பு குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கிராமத்து கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்திய அனுமோல் மாடர்ன் உடையில் பள்ளி படிக்கும் பெண் போல் உள்ளார். ஒருவேளை இது அயலியா என்று யோசிக்கும் அளவிற்கு அந்த புகைப்படம் உள்ளது. அப்படி இளமையுடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Also Read : டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்.. 700 எபிசோடோடு ஊத்தி மூடிய சன் டிவி

இதை பார்த்த ரசிகர்கள் அயலி அம்மாவா இது என வாயை பிளந்துள்ளனர். மேலும் அயலி தொடருக்கு தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த தொடரின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.

மாடர்ன் உடையில் கலக்கும் அயலி அம்மா

anumol-ayali

Also Read : அந்த 3 சம்பவங்களால் மொத்தமாக மாறிய அஜித்.. பிரபலங்களின் இறப்பிற்கு கூட வராத காரணம்

Trending News