சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சிஏஏ சட்டம் எதுக்கு, யாரை ஏமாற்ற இந்த நாடகம்.? ராதிகாவுக்கு MP சீட் கிடைத்ததன் பின்னணி

Actress Radhika: சரத்குமார் தன்னுடைய கட்சியை பி.ஜே.பியுடன் இணைத்து விட்டார். இது கட்சியில் உள்ள தொண்டர்களுக்கு விருப்பம் இல்லாத செயலாக இருக்கிறது.

இருந்தாலும் நாட்டாமை கட்சியை இணைத்த கையோடு மனைவிக்கு எம்பி சீட்டும் வாங்கிவிட்டார். அதன்படி ராதிகா தற்போது விருதுநகர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

ஆனால் இதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கிறது. அதாவது அந்த தொகுதியில் குறிப்பிட்ட மூன்று சமூகத்தினர் மட்டுமே அதிகமாக இருக்கின்றனர்.

அதை வைத்து பார்க்கும் போது ராதிகாவுக்கு அதிக ஓட்டுகள் விழும். ஏனென்றால் சரத்குமார் மற்றும் எம் ஆர் ராதா இருவரின் சமூகத்தினர் அங்கு அதிகமாக இருக்கிறார்களாம்.

ராதிகா எம்பி சீட் வாங்கிய பின்னணி

மேலும் ராதிகா, சரத்குமார் இருவருமே பிரபலங்கள். அவர்களை காண நிச்சயம் மக்கள் கூடி விடுவார்கள். அதிலும் நாட்டாமையின் மனைவி பேச்சில் எவ்வளவு திறமையானவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இதையெல்லாம் கணக்கிட்டு தான் அவருக்கு இந்த சீட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் சர்ச்சையான ஒரு விஷயமும் இருக்கிறது. அதாவது ராதிகா இலங்கையைச் சேர்ந்தவர்.

நடிப்பதற்காக தான் அவர் இங்கு வந்திருக்கிறார். தற்போது சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது எப்படி சாத்தியமாகும். ஏனென்றால் இலங்கை இந்த சட்டத்திற்குள் வராது.

அப்படி இருக்கும்போது இலங்கையைச் சேர்ந்தவர் எப்படி இந்த தேர்தலில் போட்டியிட முடியும். சரத்குமார் தமிழர் என்பதால் அவருடைய மனைவிக்கு இங்கே குடியுரிமை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

பிஜேபி போட்ட பிளான்

அதே போல் தான் ராஜீவ் காந்தியை கொன்ற முருகன் இலங்கையை சேர்த்தவர். அவருடைய மனைவி நளினி இந்தியாவை சேர்ந்தவர். அவருக்கு ஏன் இந்திய குடியுரிமை கிடைக்கவில்லை.

இது எல்லாம் பிஜேபி போட்ட பிளான் தான். ராதிகாவை வைத்து தமிழ்நாட்டு ஓட்டை வாங்க முயற்சி செய்கின்றனர். ஆனால் இது பின்னால் நாட்டாமையின் மனைவிக்கு பிரச்சனையில் தான் முடியும்.

மேலும் சரத்குமார் கட்சியில் சேர்ந்தது கூட பணத்திற்காக தான். ராதிகா நடத்தி வரும் ராடான் நிறுவனம் மூலம் விளம்பர படம் எடுத்து கோடிகளை சம்பாதிக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறது.

அதனாலேயே தொண்டர்களின் எதிர்ப்பையும் மீறி கட்சியை இணைத்துள்ளனர். இப்படி ராதிகா சீட்டு வாங்கிய பின்னணியை பத்திரிக்கையாளர் பாண்டியன் வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.

Trending News