புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பொன்னியின் செல்வனுக்கு இப்படித்தான் வாய்ப்பு கிடைத்தது.. ஹோட்டலில் நடந்த உண்மையை கூறிய பூங்குழலி

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததாலேயே பல நடிகரின் நடிகைகளுக்கு மார்க்கெட் டாப் கீரில் எகிறி கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கேரக்டரையும் மணிரத்தினம் செதுக்கி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

ஆனால் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் இந்த படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமியை திரையில் பார்த்த இளசுகள் இன்னும் கிறங்கி கிடக்கின்றனர்.  அந்த அளவிற்கு மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

Also Read: எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத மணிரத்தினத்தின் டாப் ஹீரோ.. அப்பாக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கு!

இவருக்கு எப்படி அந்த பட வாய்ப்பு கிடைத்தது என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி கேரளாவை சேர்ந்தவர். இவர் சினிமாவுக்காக வாய்ப்பு தேடி சென்றதே இல்லை. சினிமாவுக்காக ஆசைப்பட்டதும் இல்லையாம்.

இவர் நன்கு விதவிதமான உணவுகளை சாப்பிடக் கூடியவர். விதவிதமான ஹோட்டலை தேடி அலைந்து சாப்பிடக் கூடியவர். எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கும் போது கடைசி வருடத்தில் அடிக்கடி ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது வழக்கம். அப்படி செல்லும் பொழுது அங்கு படத்திற்கு ஆட்கள் தேர்வு செய்து வந்தனர்.

Also Read: மணிரத்தினத்திற்கு டாடா காண்பித்த செல்ல பிள்ளைகள்.. தலை தெரிக்க ஓடிய 3 ஹீரோக்கள்

அப்போது நண்பர்களுடன் இருக்கும்பொழுது விளையாட்டாக பேசிக்கொண்டு அதில் கலந்து கொண்டேன். போன வேகத்தில் என்னை தேர்ந்தெடுத்து விட்டனர். அப்போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. சினிமாவில் நடிக்க பல பேர் பலவிதமான முயற்சிகள் செய்து வருகின்றனர்.

நமக்கு இப்படி ஈஸியாக கிடைக்கிறது என்று, கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டேன். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு சாப்பிடுவதிலும் கரெக்டாக இருந்து கொண்டு இன்றுவரை நிறைய படங்களில் நடித்து வருகிறேன். மணிரத்தினம் கூப்பிட்டு வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளேன் என பெருமையாக பேசி உள்ளார்.

Also Read: என் பொண்டாட்டி நடிச்சதிலேயே எனக்கு புடிச்ச படம் இதுதான்.. உலக அழகி நடிப்பில் மயங்கிய பச்சன்

Trending News