புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோடிகளில் கல்லா கட்டும் கீர்த்தி சுரேஷ்.. முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Actress Keerthy Suresh: குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ் இப்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்துள்ளார். மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கொடி கட்டி பறக்கும் இவரின் முதல் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்திருக்கிறது.

தற்போது இவரின் நடிப்பில் மாமன்னன் வெளியாகி இருக்கும் நிலையில் அடுத்ததாக சைரன், ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட பல படங்கள் இவருடைய கைவசம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் முன்னணி நடிகை பட்டியலில் இருக்கும் இவர் தற்போது மூன்றிலிருந்து 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

Also read: விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் திணறும் கீர்த்தி சுரேஷ்.. உதயநிதியால் ஏமாந்த பரிதாபம்

ஆனால் இவர் முதல் முதலாக வாங்கிய சம்பளம் வெறும் 500 ரூபாய் தான். குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வந்த இவருக்கு கணிசமான அளவு சம்பளம் செக்காக கொடுக்கப்படுமாம். அந்த சிறு வயதில் சம்பளம் பற்றி தெரியாத கீர்த்தி அதை அப்படியே தன் அப்பாவிடம் கொடுத்து விடுவாராம்.

ஆனால் நினைவு தெரிந்த நாளில் இவர் வாங்கிய இந்த 500 ரூபாயை தான் அவர் தன்னுடைய முதல் சம்பளமாக கூறுகிறார். அந்த வகையில் ஃபேஷன் டிசைனிங் படித்திருக்கும் இவர் ஒருமுறை கல்லூரியில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார். அதற்காக இவருக்கு 500 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also read: அனுஷ்கா மாதிரி எனக்கு கேரியர் போயிடக் கூடாது.. உடல் எடை குறைத்த ரகசியத்தை உடைத்த கீர்த்தி சுரேஷ்

அதைத்தான் தன்னுடைய முதல் சம்பளமாக கீர்த்தி சுரேஷ் பெருமையாக கூறி வருகிறார். அதன் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் லட்சங்களில் தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். பிறகு சிவகார்த்திகேயன், விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிசியான நடிகையாக மாறினார்.

அது மட்டுமின்றி சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த இவர் தேசிய விருதையும் பெற்றார். அதைத்தொடர்ந்து தற்போது இவருக்கான மார்க்கெட் அதிகரித்திருக்கும் நிலையில் நான்கு கோடி வரை சம்பளம் வாங்கி வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த படங்களில் இன்னும் அதிகமாக கல்லா கட்டவும் ப்ளான் போட்டு இருக்கிறாராம்.

Also read: குடும்ப நண்பருடன் கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா.? சர்ச்சையை கிளப்பிய அப்பாவின் பதில்

Trending News