திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிச்சைக்காரன் 2 பட கதை இதுதான்.. தேறி வரும் விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்த சோதனை

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தான் இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனால் வெற்றிப்படமான பிச்சைக்காரன் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.

இதற்காக படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது சற்றும் எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனிக்கு ஏற்பட்ட விபத்தினால் அபாயகரமான கட்டத்திற்கு சென்று இப்பொழுது அதில் இருந்து தேறி வந்திருக்கிறார். மேலும் அடுத்த கட்டமாக படத்திற்கு சம்பந்தமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். ஏனென்றால் இந்த படத்தை சீக்கிரம் முடித்துவிட்டு கோடை விடுமுறையில் வெளியிடலாம் என்று தீவிர முயற்சிக் காட்டி வருகிறார்.

Also read: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விஜய் ஆண்டனி.. மூளையை மாற்றி கம்பேக் கொடுத்த பிச்சைக்காரன் 2

இந்நிலையில் இந்த படத்தின் கதை பிரபல ஹாலிவுட் படத்தின் தழுவல் தான் என்கிறார்கள். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த “தி மேன் வித் டிரான்ஸ்பிளான்ட் பிரைன்” இந்த படத்தின் கதைதான் பிச்சைக்காரன் 2. அதாவது இந்த படத்தின் கதையானது ஒருவருடைய மூளையை எடுத்து மற்றொருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் தலையில் பொருத்துவது தான்.

அதன் மூலம் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த படத்தில் கூறி இருக்கிறாராம். மேலும் இந்த படத்திற்கான ஸ்னீக் பீக் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ட்ரைலர் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் நிறைந்த திரைப்படமாக தெரிகிறது.

Also read: கடுமையான மன உளைச்சலில் இருக்கும் விஜய் ஆண்டனி.. 2021ல் இருந்து பிடித்து ஆட்டும் கெட்ட நேரம்

இந்நிலையில் இப்பொழுது சிங்கப்பூரில் இருந்து திடீரென ஒருவர் இந்த டிரெய்லர்ரை பார்த்துவிட்டு இது என்னுடைய கதை என்று சொல்லி வருகிறார். மேலும் இந்த கதை நான் ஏற்கனவே விஷாலுக்கு சொல்லி இருந்திருக்கிறேன். அவரும் இந்த படத்தில் நடிப்பதாக ஒத்துக் கொண்டுள்ளார் என சண்டையிட்டு வருகிறார்.

இதனால் விஜய் ஆண்டனிக்கு சோதனை மேல் சோதனையாக இருந்து வருகிறது. ஏனென்றால் இப்பொழுது தான் இவர் விபத்திலிருந்து சரியாகி வந்திருக்கிறார். அதனை தொடர்ந்து இப்பொழுது இவர் இந்த மாதிரியான பிரச்சினையும் சந்தித்து வருகிறார். இந்த பிரச்சனை எல்லாம் தாண்டி இவர் நினைத்தபடி படத்தை கோடை விடுமுறையில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: விஜய் ஆண்டனியை சுற்றி சுற்றி அடிக்கும் கெட்ட நேரம்.. தயவு செஞ்சு அத மாத்தி தொலைங்க!

Trending News