தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு சார்பாக தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கினார். கடந்த 45 ஆண்டு காலமாக கலை துறையில் தனது பெரும் பங்கினை சிறப்பாக வழங்கி வருவதற்காக நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இயக்குனர் கே.பாலசந்தர் அவர்கள் நடிகர் ரஜினிகாந்தை அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்தார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு ரஜினிகாந்த் நாடக குழுவினருடன் இணைந்து, கடினமான கதாபாத்திரத்தை வேடமிட்டு நடித்து வந்துள்ளார். முதலில் ரஜினிகாந்த் பேருந்தின் நடத்துனராக பணிபுரிந்தார்.
அதே பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்தவர் ராஜ் பகதூர். ரஜினியின் நடை, பேச்சு, ஸ்டைல் போன்றவற்றை பார்த்த ராஜ் பகதூர், ரஜினியை திரைப்படத்தில் நடிப்பதற்கு முயற்சி செய்யும் படி வலியுறுத்தினார். முயற்சியின் முதல் செயலாக மெட்ராஸ் சென்று திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெறும்படி கூறினார்.
தோழரின் பேச்சை கேட்டு மெட்ராஸ்க்கு வந்த ரஜினி, இயக்குனர் கே.பாலச்சந்தரை சந்தித்தார். ரஜினியிடம் முதலில், தமிழ் மொழியை கற்று வரும் படி கூறினார் பாலச்சந்தர். தோழரான ராஜ் பகதூரே ரஜினிக்கு தமிழ் மொழியை கற்பித்தார். விரைவில் தமிழ் மொழியை கற்றுக் கொண்ட ரஜினி, மீண்டும் பாலச்சந்தரை சந்தித்தார்.
ரஜினியின் திறமையை பார்த்த பாலச்சந்தர், இவரை அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகம் செய்தார். அதிலிருந்து படிப்படியாக உயர்ந்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார் ரஜினி. அபூர்வ ராகங்கள் திரைப்படத்தை தொடர்ந்து முரட்டுக்காளை, போக்கிரிராஜா, 16 வயதினிலே போன்ற திரைப்படங்கள் மெஹாஹிட் திரைப்படங்கள் ஆகும். அதிலிருந்தே சூப்பர் ஸ்டார் சொன்னால் குழந்தைக்குக் கூட தெரியும் என்ற பாடல்வரி கேட்ட வளர்ச்சியை அடைந்தார்.
கடந்த 45 ஆண்டு காலத்தில், பல வெற்றித் திரைப்படங்களை தந்து, உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கலைத்துறையில் இவரின் சாதனையை பாராட்டி மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கியுள்ளது. இவரின் திரையுலக பயணத்திற்கு பிள்ளையார்சுழி போட்ட நண்பர் ராஜ் பகதூர் என்பதால், இன்று வரையிலும் அனைத்து இடங்களிலும் தனது நண்பரை பற்றி கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ரஜினி.