திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அள்ளி கொடுப்பாருன்னு பாத்தா கிள்ளி கொடுத்திருக்காரு.. தலைவர் 170-க்காக லைக்கா ஒதுக்கிய பட்ஜெட்

Thalaivar 170-Lyca: ஜெயிலர் படத்தின் ஆரவாரம் எல்லாம் இப்போது ஓய்ந்த நிலையில் தலைவர் 170 வேகம் எடுத்துள்ளது. லைக்கா தயாரிப்பில் ஞானவேல் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அதில் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்ட போட்டோக்கள் தான் இப்போது மீடியாவில் வைரலாகி வருகிறது.

வழக்கத்திற்கு மாறாக புது பொலிவுடன் இளமையாக இருக்கும் தலைவரை ரசிகர்கள் கியூட்டா இருக்கீங்க என்று சந்தோஷத்துடன் கூறி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சுவாரியர் என பல முன்னணி நட்சத்திரங்களும் இதில் இணைந்திருப்பது உச்சகட்ட ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: ரஜினி படத்தில் நடிக்க அமிதாப் வாங்கும் சம்பளம்.. விளம்பரத்துக்கே மிரள வைப்பவர் நண்பன்னா சும்மாவா.?

இப்படி டாப் கியரில் செல்லும் தலைவர் 170-க்காக லைக்கா நிச்சயம் பிரம்மாண்ட பட்ஜெட்டை ஒதுக்கி இருக்கும் என பலரும் யோசித்து வந்தனர். ஆனால் என் ரூட்டே தனி என தயாரிப்பு தரப்பு வெறும் 30 கோடி ரூபாயை தான் படத்திற்காக செலவழிக்க போகிறார்களாம்.

சூப்பர் ஸ்டாரின் படத்திற்கு இவ்வளவு தான் பட்ஜெட்டா என்று பலருக்கும் இது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஏனென்றால் இப்போது வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களே 100 கோடி பட்ஜெட்டை தாண்டி விடுகிறது. அப்படி இருக்கும்போது லைக்கா எண்ணி எண்ணி செலவு செய்வது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

Also read: தலைவர் 170 இல் கலக்கப்போகும் தைரியமான 4 நடிகைகள்.. ரஜினியுடன் சண்டை போட வரும் நடிகை

ஆனால் சம்பளத்தை பொருத்தவரை ரஜினிக்கு மட்டுமே 90 கோடி பேசப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து மற்ற நடிகர், நடிகைகளுக்கெல்லாம் சேர்த்து 40 கோடி வந்துவிட்டதாம். அதனாலேயே லைக்கா அள்ளிக் கொடுப்பதற்கு பதிலாக 30 கோடி ரூபாய் என கிள்ளி கொடுத்திருக்கின்றனர்.

இதை வைத்து தான் இயக்குனர் இப்போது படத்தை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். இது சூப்பர் ஸ்டார் படத்திற்கு மட்டுமல்லாமல் அதிக சம்பளம் வாங்கும் மற்ற ஹீரோக்களின் படங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படியே போனால் தமிழ் சினிமாவின் நிலை என்ன என தெரியவில்லை என்ற புலம்பல்கள் இப்போது வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்துவிட்டது.

Also read: படுஜோராக நடந்த தலைவர் 170 பட பூஜை.. ஆளே அடையாளம் தெரியாமல் ஹேண்ட்ஸம் லுக்கில் ரஜினி

Trending News