வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

டைட்டில் வின்னர் கனவு வீணா போச்சு.. பிக்பாஸை விட்டு திடுதிப்புன்னு வெளியேறும் போட்டியாளர் இவர்தான்

Biggboss 7: இப்போது பிக்பாஸ் டைட்டிலை யார் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. அதன்படி ஃபைனலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விஜய் வர்மா அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

அதைத்தொடர்ந்து இன்றும் ஒரு எலிமினேஷன் இருக்கிறதாம். அதன்படி கடைசி இடத்தில் இருக்கும் விஷ்ணு தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். ஆனால் இதில் ரசிகர்களுக்கு எந்த ஆச்சர்யமும், அதிர்ச்சியும் இல்லை.

ஏனென்றால் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்கள் நிச்சயம் டைட்டிலை அடிக்க மாட்டார்கள் என்பது தெரிந்த கதை தான். அதுதான் விஷ்ணு விஷயத்திலும் நடந்திருக்கிறது. அந்த வகையில் இவர் வெளியேறி விட்டால் மீதம் இருப்பது நான்கு நபர்கள் தான்.

Also read: இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் 7.. ஓட்டிங்கில் முதல் 3 இடத்தை பிடித்தது இவர்கள் தான்

அதில் அர்ச்சனா தான் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக மணிக்கு அதிக ஆதரவும், ஓட்டும் இருக்கிறது. மீதம் இருப்பவர்களில் தினேஷுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தாலும் அவர் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

அந்த வகையில் விஜய் டிவியின் திட்டப்படி மாயா தான் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இது எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்கிறது நம்ப தகுந்த வட்டாரங்கள். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி நேரம் வரையிலும் பரபரப்பாக தான் உள்ளது. ஆக மொத்தம் டைட்டில் வின்னர் கனவு உடன் இருந்த விஷ்ணுவின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணா போனது தான் மிச்சம்.

Also read: தீயாக நடக்கும் ஓட்டு வேட்டை.. பிக்பாஸ் வரலாற்றை புரட்டிப் போடும் அர்ச்சனா

Trending News