திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

இனிமேதான் சம்பவம் இருக்கு.. தாத்தாவின் ஆட்டத்தால் அலறி அடித்துக்கொண்டு ஓடப் போகும் ராதிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதில் தற்போது இனியா பள்ளியில் மொபைல் ஃபோனை பயன்படுத்தி தவறு செய்துள்ளார். இதை வீட்டில் சொல்ல பயந்துகொண்ட தனது அப்பா கோபிக்கு ஃபோன் செய்து இனியா பள்ளிக்கு வர சொல்லி உள்ளார்.

அதேபோல் கோபி, இனியா பள்ளிக்கு வந்து மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுள்ளார். இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரிந்து போக வீட்டில் பூதாகர சண்டை வெடிக்கிறது. அப்போது எல்லோரும் அடிப்பதாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேற இனியா நினைக்கிறார். அந்த சமயத்தில் வெளியில் வந்த கோபி இனியாவை அழைத்த வீட்டினுள் செல்கிறார்.

Also Read : விஜய் டிவி நல்ல உருட்டுறீங்க.. பிக் பாஸ் வீட்டில் ப்ளூடூத் பயன்படுத்திய போட்டியாளர், ரெட் கார்ட் கன்ஃபார்மா?

அப்போது எல்லோர் முன்னிலையிலும் உனக்கு யாருடன் இருக்க விருப்பம் என இனியாவை கோபி கேட்கிறார். தனக்கு அப்பா தான் முக்கியம் என கோபியுடன் இனியா சென்று விடுகிறார். இதனால் பாக்யா குடும்பத்தில் எல்லோரும் கவலையாக உள்ளனர். ஆனால் இதில் இனியாவின் தாத்தா தரமான சம்பவம் செய்ய உள்ளார்.

அதாவது இனியாவுக்கு துணையாக பெட்டி படுக்கையுடன் தாத்தாவும் ராதிகா வீட்டுக்கு செல்கிறார். இதைப் பார்த்த கோபி கதி கலங்கி நிற்கிறார். ராதிகாவும் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நிற்கிறார். ஆகையால் இப்போதுதான் பாக்கியலட்சுமி தொடர் சூடு பிடிக்க உள்ளது.

Also Read : இனியாவை பாக்கியாவிடம் இருந்து பிரித்த கோபி.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

வீட்டு வேலை, சமையல் என எல்லா விஷயத்திலும் ராதிகாவை வாட்டி வதைக்க உள்ளார் தாத்தா. இவரின் மீது உள்ள கோபத்தை கோபி மீது ராதிகா காட்ட உள்ளார். வேறு வழியில்லாமல் இவர்களுக்குள் மாட்டிக்கொண்டு கோபி படாதபாடு பட உள்ளார்.

போதாக்குறைக்கு இனியா மற்றும் மயூ இடையே அடிக்கடி சண்டை வர உள்ளது. தன்னுடைய அப்பாவை மயூ டாடி என்று கூப்பிடுவது இனியாவுக்கு அதிக எரிச்சலை ஏற்படுத்தும். ஆகையால் எல்லா பிரச்சனையும் தற்போது கோபி தலையில் விழ உள்ளது.

Also Read : அசல் கோலாறால் சர்ச்சையில் சிக்கிய வடிவேலு.. கடும் கோபத்தில் ஷங்கர்

Trending News