ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பப்லுவின் பிரிவிற்கு இதுதான் முக்கிய காரணம்.. தடையாக இருந்த ஷீத்தல்

Babloo and Sheetal Breakup : சிவாஜி, எம்ஜிஆர் நடிக்கும் காலத்திலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் நடிகர் பப்லு. அதன் பின் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஆனாலும் இவருக்குப் பிறகு வந்த நடிகர்கள் அனைவரும் சினிமாவில் அவர்களுக்கு என்று ஒரு முத்திரையை பதித்து விட்டார்கள்.

அந்த இடத்தை சீனியர் நடிகராக இருந்தும் இவரால் தொட முடியவில்லை. அதற்கு காரணம் இவருடைய முன் கோபம் மற்றும் பேச்சு எதுவும் செட் ஆகவில்லை. அதனாலயே படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்த அதிர்ஷ்டம் இல்லாத ஒரு நடிகர். அப்படிப்பட்ட இவர் சின்னத்திரையில் பல நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் 54 வயதில் கடந்த வருடம் இளம் வயது பெண்ணான ஷீத்தல் என்பவரை காதலித்தார்.

அத்துடன் கல்யாணம் பண்ணாமலேயே லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் அளவிற்கு பூகம்பமாக வெடித்தது. ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத பப்லு பேட்டி ஒன்றில் எனக்கு 54 வயது ஆனாலும் பொம்பள சோக்கு தேவைப்படுது என்று வாய் கூசாமல் அநாகரிகமாக பேசி இருந்தார்.

Also read: சினிமாவை விட சீரியலில் கொள்ள லாபம் பார்க்கும் 5 நட்சத்திரங்கள்.. 100 கார்களை மாற்றி கொடிகட்டி பறக்கும் பப்லு

இதனை தொடர்ந்து பப்லு ஷீத்தலுடன் சேர்ந்து இருக்கும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தார். அப்படிப்பட்ட இவர்களுடைய வாழ்க்கையில் தற்போது ஒரு பிளவு ஏற்பட்டு விட்டது. அதற்கு காரணம் என்னவென்றால் ஹிந்தியில் வெளியான அனிமல் திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் பப்லு நடித்திருக்கிறார். இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகி வெற்றி பெற்றிருக்கிறது.

அதனால் இந்த சான்சை பயன்படுத்தி தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதுவும் ஹிந்தி படத்தில் மிகப்பெரிய வெற்றியை பார்த்த இவருக்கு அடுத்தடுத்து நடித்து சினிமாவில் வெற்றி அடைய வேண்டும் என்று தீர்மானித்து விட்டார். அதனால் இவருடைய முழு கவனமும் நடிப்பின் மீது திரும்பிவிட்டது. .

இதற்கு தடையாக ஷீத்தல் வந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக இவரை விட்டு பிரிய நினைத்திருக்கிறார். எப்படியோ இவரிடம் இருந்து அந்த இளம் பெண் வாழ்க்கைக்கு விடிவு காலம் பிறந்து விட்டது. அதே மாதிரி இவருடைய கனவும் நிறைவேறும்படி பெரிய நடிகராக வந்துவிட்டாலும் ஓகே தான்.

Also read: வயசுலாம் ஒரு மேட்டரே இல்ல என திருமணம் செய்த 5 நடிகர்கள்.. 33 வயது பொண்ணுடன் ஆட்டம் போடும் பப்லு

Trending News