GV Prakash: இன்று திவ்ய பாரதி போட்ட இன்ஸ்டா பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணமான நடிகருடன் நான் ஏன் டேட்டிங் செய்ய வேண்டும் என பல நாள் கிசுகிசுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் உடன் பேச்சுலர் படத்தில் நடித்த பிறகுதான் இந்த கிசுகிசு கிளம்பியது. சம்பந்தப்பட்ட இருவரும் இதைப் பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
ஆனால் ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து அறிவிப்பிற்கு பின் மீண்டும் இந்த விவகாரம் பற்றி எரிய தொடங்கியது. அதற்கேற்றார் போல் சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் படத்தில் திவ்யபாரதி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
குறுக்க வந்த திவ்ய பாரதி
அதை அடுத்து இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. அப்போது ஜிவி பிரகாஷ் கூட இதில் எந்த உண்மையும் கிடையாது என சொல்லி இருந்தார்.
இந்த சூழலில் தற்போது திவ்யா பாரதி இதற்காக கொடுத்துள்ள ரியாக்ஷன் தேவையில்லாதது. பெரிதாக இதைப் பற்றி யாரும் இப்போது பேசவில்லை.
அப்படி இருக்கும்போது முடிந்து போன விஷயத்தை ஏன் கிளற வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அவருக்கு நெருங்கிய ஒருவர் இது குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார். அதாவது திவ்யபாரதி இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் பெரிய அளவில் ஓடவில்லை.
அதனால் பப்ளிசிட்டிக்காக தான் இப்படி ஒரு பதிவை அவர் போட்டுள்ளார். இல்லை என்றால் ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி விடுவார்கள்.
இது ஒரு காரணம் என்றால் ஜி வி பிரகாஷ் வளரக்கூடாது என சில விஷமிகள் இப்படி வதந்தியை கிளப்பி விடுகின்றனர். தற்போது அவர் இசையில் குட் பேட் அக்லி படம் வெளிவர இருக்கிறது.
படத்தின் முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் வேற லெவலில் வரவேற்பை பெற்றுள்ளது. அதை அடுத்து டீசரில் மிரட்டலான பின்னணி இசை அனைவரையும் கவர்ந்தது.
அதேபோல் ஜிவி பிரகாஷ் கைவசம் அடுத்தடுத்த படங்கள் இருக்கிறது. எங்கே அவர் டாப் ஹீரோக்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்து விடுவாரோ என்ற பொறாமை தான் இதற்கு காரணம்.
ஆனால் அவர் இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார். தன் வேலையை மட்டுமே பார்த்து வருகிறார் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.