சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பாலிவுட் படங்களின் தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்.. நாசுக்காக சுதாரித்துக் கொண்ட மணிரத்தினம்

இயக்குனர் மணிரத்னம் தற்போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக படமாக எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்குனர் மட்டுமல்லாமல் பல படங்களை தயாரித்து உள்ளார்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தையும் லைக்காவுடன் இணைந்து மணிரத்தினம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் உடன் தயாரித்துள்ளார். மிகப்பிரம்மண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ள வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also Read : பொன்னின் செல்வன் காட்டிய தீராத ஆசை.. 12 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்

இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மணிரத்தினம் ஒரு கோரிக்கை வைத்துள்ளாராம். அதாவது சமீபகாலமாக பாலிவுட் படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் உச்ச நடிகர் படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்கள் புறக்கணிக்கின்றனர்.

இதற்கு காரணம் ஒரு புறம் நிப்போட்டிசம் என்று சொன்னாலும், படத்தின் டிக்கெட் விலை காரணமாகத்தான் இந்த படங்கள் ஓடவில்லை என கூறப்படுகிறது. அதிலும் பாலிவுட்டில் டாப் நடிகர்களின் படங்கள் என்றால் டிக்கெட்டின் விலை பல மடங்கு அதிகரித்திருக்கும்.

Also Read : லிகர் படம் போல் புறக்கணிக்கப்படும் ஹிரித்திக் ரோஷனின் விக்ரம் வேதா.. பின்னால் இருக்கும் காரணம்

இதைக் கருத்தில் கொண்டு மணிரத்தினம் முக்கிய முடிவு எடுத்துள்ளார். அதாவது பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் 100 ரூபாய் மட்டுமே வசூலிக்குமாறு மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்களிடம் மணிரத்தினம் கேட்டுக் கொண்டுள்ளார்.

manirathinam-with-multiplex-owners
manirathinam-with-multiplex-owners

ஏழை, எளிய மக்களும் இந்த படத்தை பார்க்க வசதியாக இருக்கும் என்பதற்காக மணிரத்தினம் இவ்வாறு செய்து உள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் பாலிவுட் படங்கள் ஓடாததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என அறிந்து மணிரத்தினம் தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு சாதுரியமான முடிவை எடுத்து உள்ளார். மேலும் டிக்கெட் விலை மிகக் குறைவு என்பதால் சாமானியர்கள் முதல் இப்படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

Also Read : முன்பதிவில் பல கோடி லாபம் பார்த்த பொன்னியின் செல்வன்.. மிரள விட்ட மணிரத்னம்

Trending News