திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

என் வாழ்க்கையிலே உருப்படியான படம் இதுதான்.. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் ஜெயம் ரவி போட்ட பூஜை

Actor Jayam Ravi: பொதுவாகவே சினிமா பிரபலங்கள் பலருக்கும் எந்த அளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருகிறதோ அதே அளவுக்கு நெகட்டிவான கருத்துக்களையும் கொடுத்து வருவார்கள். ஆனால் சிலருக்கு அந்த பிரச்சனை ரசிகர்களிடமிருந்து இருக்காது. அவர்களுக்கு எப்போதுமே மக்களிடத்தில் நல்ல விமர்சனம் தான் கிடைத்து வரும். இந்த வகையை சேர்ந்தவர் தான் ஜெயம் ரவி.

இவரை வெறுப்பவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான ஒரு நடிகர். அது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் இயக்குனர்களுக்கும் இவர் என்றால் ரொம்பவே ஃபேவரிட் தான். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த பொன்னின் செல்வன் படத்தில் செல்லப் பிள்ளையாக அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Also read: எட்டு ஆண்டுகளில் தன்னோடு சேர்த்த 6 இயக்குனர்களையும் வளர்த்துவிட்ட ஜெயம் ரவி.. இந்த நல்ல மனசு யாருக்கு வரும்.!

அப்படிப்பட்ட இவர் பல படங்களில் எத்தனையோ கேரக்டரில் நடித்தாலும் இவருடைய சாஃப்ட்டான முகம் மட்டும் மறையவே செய்யாது. அதிலும் இவருடைய சிரிப்புக்கு அத்தனை ரசிகர்களும் அடிமையாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர் நிறைய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் இறைவன், சைரன். இதில் இறைவன் படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சைரன் படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார்.

Also read: 23 வயது வித்தியாசமுள்ள நடிகையுடன் ஜோடி போடும் ஜெயம் ரவி.. வொர்க் அவுட் ஆகுமா இந்த கெமிஸ்ட்ரி

இதனைத் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி இருந்தாலும் தற்போது பட பூஜையுடன் ஒரு படத்தின் டைட்டிலை வெளியிட்டிருக்கிறார். மிகப் பிரம்மாண்ட நிறுவனமான வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தை புவனேஷ் அர்ஜுனன் இயக்கி, ஏஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார்கள். மேலும் இப்படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப் போகிறார்கள்.

அத்துடன் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு, கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி செட்டி மற்றும் வமிக்கா கேபி என மூன்று நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் டைட்டில் ஜீனி என்று வெளியிட்டு பட பூஜையை ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பின் இது குறித்து ஜெயம் ரவி பேசியதில் என் வாழ்க்கையிலேயே மிக உருப்படியான படமாக இருக்கப் போகிறது. அதற்கான காரணத்தை படம் ரிலீஸ் ஆகும் போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என்று பாசிட்டிவாக பேசியிருக்கிறார்.

Also read: தங்கையாக நடித்து பின் ஜோடி போட்ட 5 நடிகைகள்.. ஜெயம் ரவியை கண்ணசைவில் சுத்த விட்ட குந்தவை

Trending News