வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நெல்சன் மிரட்டும் ஜெயிலர் படத்தின் கதை இதுதான்.. ரஜினியை தூக்கி விடும் பான் இந்தியா ஹீரோக்கள்

Actor Rajini: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படம் பற்றிய பேச்சு தான் இப்போது சோஷியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் சிறு இடைவெளிக்குப் பிறகு இப்படம் வருவதால் ரசிகர்கள் இதன் ரிலீஸ் நாளை எதிர்நோக்கி ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இதனாலேயே இப்படத்திற்கான ஆர்வமும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாடல் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

Also read: இந்த ரஜினி பாட்டு உங்களுக்காக எழுதியது தான் தளபதி.. சரமாரியாக வறுத்தெடுத்த பயில்வான்

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் கதை என்ன என்ற தகவலும் தெரியவந்துள்ளது. அதாவது இப்படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்னும் கேரக்டரில் நடிப்பது அனைவருக்கும் தெரியும். கதைப்படி ஜெயில் வார்டனாக இருக்கும் இவரின் ஆக்ரோஷ தாண்டவம் தான் படத்தின் கதை.

அந்த வகையில் சிறையில் இருக்கும் தங்கள் கூட்டத்தின் தலைவனை வெளியில் கொண்டு வருவதற்காக வில்லன் கோஷ்டிகள் முயற்சி செய்கின்றனர். அதை ரஜினி தன்னுடைய பாணியில் தடுக்கின்றார். இந்த உக்கிரமான மோதலுக்கு பின்னால் சிலை கடத்தல் தான் காரணமாக இருக்கிறது.

Also read: யாருப்பா அடுத்த சூப்பர் ஸ்டார்.? விஜய்யையும் , எஸ்.ஏ.சி-யையும் வச்சி செய்த ஜெயிலர் பட ஹூக்கும் பாடல்

அதை மையப்படுத்தி தான் ஜெயிலர் படத்தின் கதையும் நகருமாம். இப்படி முக்கிய பிரச்சினையை கையில் எடுத்திருக்கும் சூப்பர் ஸ்டார் இதன் மூலம் தன்னுடைய ருத்ரதாண்டவத்தையும் காண்பிக்க இருக்கிறார். அந்த வகையில் இப்படம் சுமார் 2 மணி 30 நிமிடங்கள் ஓடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுதான் இப்போது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் படங்கள் இனி கல்லா கட்டாது என்ற ஒரு பேச்சு இருக்கிறது அதை எல்லாம் துவம்சம் செய்யும் அளவுக்கு ஜெயிலர் படம் இருக்கும் என்பது பட குழுவின் ப்ரமோஷன்களிலேயே தெரிகிறது. அந்த வகையில் ரஜினியை தூக்கி விட வரும் பான் இந்தியா நடிகர்கள் மற்றும் நெல்சனின் மிரட்டும் கதை என ஜெயிலர் சரியான சம்பவத்திற்கு தயாராகி இருக்கிறது.

Also read: ரஜினியை மீண்டும் மீண்டும் வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை.. வடிவேலு காமெடியை வைத்து பண்ணும் அலப்பறை

Trending News