தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கைகள் கலந்துகொண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், விஜய் டிவியில் தற்போது துவங்கப்பட்டுள்ள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் முதலாக திருநங்கை நமிதா மாரிமுத்துவை ஒரு போட்டியாளராக தேர்வுசெய்து பிக்பாஸ் வீட்டினுள் அனுப்பி வைத்துள்ளனர்.
நமிதா மாரிமுத்துவின் நிஜப்பெயர் பாலாஜி. குடும்பத்தில் ஒரே மகனாகப் பிறந்து அதன்பிறகு திருநங்கையாக உணர்ந்த தருணத்தில் குடும்பத்தால் நிராகரிக்கப்பட்ட நமிதா மாரிமுத்து, கல்லூரி படிக்கும் பொழுது அவர் முழுமையாக பெண்ணாக மாறியுள்ளார். அதன் பிறகு பல போராட்டத்திற்கு பின்பே குடும்பத்தாரால் ஏற்றுக்கொண்டனர்.
பின்பு பெற்றோரின் உறுதுணையுடன் நமிதா மாரிமுத்து, கடந்த 2014ஆம் ஆண்டு திருநங்கைகளுக்காக நடைபெற்ற ‘மிஸ் சென்னை’ போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வென்ற பெருமைக்குரியவர். அதுமட்டுமின்றி 2015 ஆம் ஆண்டு மிஸ் கூவாகம் டைட்டில் வின்னர் ஆகவும். அதைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டு மிஸ் இந்தியா டைட்டில் வின்னர் ஆகவும் நமிதா மாரிமுத்து தனக்கென தனி இடத்தை வகுத்தவர்.
இத்தகைய பெருமைக்குரிய நமீதா மாரிமுத்துவை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் சகிலாவின் மகள் திருநங்கை மிலாவிற்கும் நமிதா மாரிமுத்துவிற்கும் இடையே யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் விஜய் டிவி எழுந்தபோது நமிதா மாரிமுத்து வாங்கிய விருதுகளின் அடிப்படையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.
மேலும் நமிதா மாரிமுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கமல்ஹாசன் முன்பு பேசிய போது, திருநங்கை சமூகத்தினரை பிரதிபலிக்கக் கூடிய ஒரு நபராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ளேன் என்று பெருமிதத்துடன் கூறினார்.
அதைத் தொடர்ந்து கமலும், திருநங்கை என சொல்வதைவிட பாலினத்தை கடந்தவர் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும் என்றும் மூன்றாம் பாலினத்தவர்களை பெருமைப்படுத்தினார். எனவே நமிதா மாரிமுத்து திருநங்கையாக இந்த சீசனில் கலந்து கலந்துகொண்டதுடன் பிக் பாஸ் வீட்டில் இறுதி நாள் வரை இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம்.