வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் குடும்பத்தில் குண்டு வைத்த குந்தவை.. சர்ச்சையை கிளப்பிய போட்டோ, உண்மை காரணம் இதுதான்

Actor Vijay: அண்மை காலமாகவே விஜய் பற்றிய பல சர்ச்சையான செய்திகள் மீடியாவில் வெளிவந்து ரணகளமாகி கொண்டிருக்கிறது. அதிலும் அவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய போவதாகவும் பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வெளிவந்த செய்தி தான் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அதையெல்லாம் ஓவர் டேக் செய்யும் வகையில் சமீபத்தில் வெளியான ஒரு போட்டோ ஒட்டு மொத்த மீடியாக்களின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது லியோ பட ஷூட்டிங்கை முடித்துள்ள விஜய் அடுத்த படத்தை ஆரம்பிக்கும் முன் ரிலாக்ஸ் செய்வதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக செய்திகள் வெளியானது.

Also read: விக்ரம் படத்தை மனதில் வைத்து விஜய் சேதுபதி கொடுக்கும் டார்ச்சர்.. உச்சகட்ட தலைவலியில் லோகேஷ்

மேலும் அவர் லண்டனில் உள்ள தன்னுடைய மாமனார் வீட்டிற்கு சென்றதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை விஜய், திரிஷாவுடன் நார்வே நாட்டில் இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. அதற்கு ஆதாரமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும் அதை படு வேகமாக ட்ரெண்ட் செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் விஜய், திரிஷா இருவரும் டேட்டிங் செல்வதாகவும் ஒரு பேச்சு கிளம்பியது. இது எல்லாவற்றிற்கும் மேலாக த்ரிஷாவால் விஜய் குடும்பத்தில் பெரும் பிரச்சனை வெடித்ததாகவும் ரகசிய தகவல் காட்டு தீ போல் பரவியது.

Also read: விஜய்யின் வாழ்நாள் சாதனையை செஞ்சு விட்ட ஜெயிலர்.. ரஜினியின் அசர வைக்கும் ரெக்கார்ட்

இப்படி பெரும் அமளி துமளியான அந்த போட்டோ எங்கு எடுக்கப்பட்டது என்ற உண்மை காரணம் தற்போது வெளிவந்திருக்கிறது. அதாவது லியோ சூட்டிங் ஸ்பாட்டில் தான் அந்த போட்டோ எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட சோசியல் மீடியா அக்கவுண்டில் இருந்து தான் அந்த போட்டோ வெளியாகி இருக்கிறது.

அதை தற்போது கண்டறிந்துள்ள லியோ பட தயாரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களிடம் அந்த போட்டோவிற்கான காப்பி ரைட்ஸ் உரிமையை பெறும் வேலையில் இறங்கி இருக்கிறார்களாம். இதன் மூலம் பல நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. அந்த வகையில் குந்தவையால் விஜய் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை இப்போது முடிவடைந்துள்ளது.

Also read: விஜய்யை மறைமுகமாக டேமேஜ் செய்யும் நெல்சன்.. சகுனியாக அடுத்தடுத்த படங்களுக்கு போட்ட பிள்ளையார் சுழி

Trending News