ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஸ்ரீதேவி நிலைமை வரக்கூடாது, 5000 கோடி சொத்துக்கு ஆபத்து.. தனுஷ் ஐஸ்வர்யா பிரிவின் பகீர் ரகசியம்

Actor Dhanush: 2 வருடங்களுக்கு முன்பாக ஐஸ்வர்யாவை பிரிகிறேன் என தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் பதறிப்போன ஒட்டுமொத்த திரையுலகமும் இது நடக்கக்கூடாது என கூறி வந்தனர்.

அது மட்டுமின்றி பல சுற்று பேச்சு வார்த்தைகளும் இவர்களிடம் மறைமுகமாக நடத்தப்பட்டது. ஆனால் அதெல்லாம் பலனளிக்காமல் போய்விட்டது.

தற்போது அவர்கள் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதை எதிர்பார்க்காத பலரும் அப்படி என்னதான் உங்களுக்கு பிரச்சனை என கேட்டு வருகின்றனர்.

ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து பின்னணி

அதில் பத்திரிக்கையாளர் பாண்டியன் சில காரணங்களை கூறியுள்ளார். அதன்படி ரஜினிக்கு குத்துமதிப்பாக பத்தாயிரம் கோடி சொத்து இருக்கிறது.

அது அவருடைய இரண்டு மகள்களுக்கும் தான். அதன்படி பார்த்தால் ஐஸ்வர்யாவுக்கு கிட்டத்தட்ட 5000 கோடி வரும்.

அந்த பணத்துக்கு ஆபத்து வரக்கூடாது என்பதால் தான் இந்த விவாகரத்து என கூறியுள்ளார். ஏனென்றால் தனுஷ் படம் எடுக்கிறேன் என்று சில கோடிகளை நஷ்டம் செய்திருக்கிறார்.

5000 கோடிக்கு வந்த ஆபத்து

அப்படி இருக்கும் போது இந்த சொத்து கைக்கு கிடைத்தால் நிச்சயம் காலி செய்து விடுவார். ஏற்கனவே ஸ்ரீதேவி விஷயத்தில் இதுதான் நடந்தது.

போனி கபூர் படம் எடுத்து இருந்த காசை எல்லாம் அழித்து விட்டார். அதன் பிறகு ஸ்ரீதேவியின் சொத்துக்களை விற்கும் நிலைக்கு வந்தார். இது அவர்களுக்குள் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது.

சொல்லப்போனால் ஸ்ரீதேவியின் மரணமே மர்மம் தான். அதனால்தான் லதா ரஜினிகாந்த் இந்த விவாகரத்துக்கு சப்போர்ட் செய்துள்ளதாக பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

Trending News