திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

மூக்குத்தி அம்மன் 2 பூஜைலயே இவ்வளவு பஞ்சாயத்தா.. நயன் டென்ஷனுக்கு அந்த செல்ஃபி தான் காரணமா.?

Nayanthara: ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து அபிநயா, ரெஜினா என பலர் இதில் நடிக்கின்றனர்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு நயன் தன் பட பூஜையில் கலந்து கொண்டதும் சோசியல் மீடியாவில் வைரலானது. பூஜை நடந்து கொண்டிருக்கும் போதே போட்டோக்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

ஆனால் அதன் பிறகு தான் ஒவ்வொரு பஞ்சாயத்தும் தெரிய வந்தது. அதிலும் நயன்தாராவின் நடவடிக்கையால் மீனா அதிருப்தியில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.

அந்த செல்ஃபி தான் காரணமா.?

அதைக் கூட மீனா நாசுக்காக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளிப்படுத்தி இருந்தார். இப்படி சூடு பிடிக்க ஆரம்பித்த இந்த விவகாரத்தில் மற்றொரு சம்பவமும் நயனின் டென்ஷனுக்கு காரணமாம்.

அன்றைய தினம் வெளியான போட்டோக்களில் அனைவரையும் கவர்ந்தது ரெஜினா எடுத்த செல்பி தான். குஷ்பூ தான் மொபைலை கொடுத்து எடுக்க சொல்லி இருக்கிறார்.

ஆனால் நயன்தாராவுக்கு இதில் விருப்பமில்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்திருக்கிறது. அதேபோல் தான் வருவதற்கு முன்பே மற்ற நடிகைகளை மேடை ஏற்றியதும் அவர் கோபத்திற்கு காரணம்.

மேலும் படத்தின் ஹீரோயின் ஆன தனக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும் என அவர் நினைத்துள்ளார்.

அது நடக்காததால் வந்த கடுப்பில் தான் நயன் பல இடங்களில் சிடுசிடுவென முகத்தை வைத்திருந்தாராம். இது பூஜை நடந்த இடத்திலிருந்து கசிந்த தகவல். இப்படியாக ஆரம்பமே ஒரு பஞ்சாயத்தில் தொடங்கி இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner

Trending News