திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆரம்பமே அமர்க்களப்படுத்திய ஜேசன் சஞ்சய்.. லைக்கா கூட்டணியின் பின்னணி காரணம்

Jason Sanjay-Lyca: இப்போது சோஷியல் மீடியா முழுவதிலும் பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் விஜய்யின் வாரிசான ஜேசன் சஞ்சய்யின் சினிமா என்ட்ரி பற்றி தான். ஒரு ஹீரோவுக்கு உரிய அத்தனை தகுதிகள் இருந்த போதிலும் தாத்தா வழியில் இயக்குனராகத்தான் வருவேன் என்று தற்போது களமிறங்கியிருக்கும் இவருக்கு எல்லா பக்கம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஏற்கனவே இவருடைய இயக்குனர் அவதாரம் பற்றி பல செய்திகள் வெளி வந்திருந்தாலும் தற்போது மிகப் பெரும் நிறுவனத்துடன் இவர் கூட்டணி அமைத்திருப்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கிறது. சமீபத்தில் லைக்கா நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

Also read: தெரியாத்தனமாக சூழ்ச்சி வலையில் மாட்டிய லியோ படம்.. வசூலில் பின்தங்கி போகும் விஜய்

இந்த நிலையில் தற்போது இந்த கூட்டணியின் பின்னணி காரணம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து பேசிய லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன், விஜய்யின் வாரிசை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அந்த அளவுக்கு ஆரம்பத்திலேயே அமர்க்களப்படுத்தி இருக்கிறார் ஜேசன் சஞ்சய்.

அந்த வகையில் இவர் கதை சொன்ன விதமும் இவருடைய திரைக்கதையும் லைக்கா நிறுவனத்தை ரொம்பவே இம்ப்ரஸ் செய்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சஞ்சய் ஒரு இயக்குனருக்கு உரிய தகுதிகளான திரைக்கதை, எழுத்து, இயக்கம் என அனைத்திலும் கைத்தேர்ந்தவராக இருப்பது தயாரிப்பு தரப்புக்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

Also read: எட்ட முடியாத உயரத்தில் ரஜினி, விஜய்க்கு போட்டி அந்த நடிகர் தான்.. வெளிப்படையாக பேசிய பிரபலம்

அதைத்தொடர்ந்து கதையை தயாரிப்பாளருக்கு சஞ்சய் விவரித்த விதமும் அவர்களை கட்டிப்போட்டிருக்கிறது. இப்படி தனித்துவம் மிக்க ஒரு கதையை சொல்லி அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்த சஞ்சய் இப்போது இயக்குனராக தன் முதல் படியை எடுத்து வைக்க இருக்கிறார். இப்படிப்பட்ட காரணங்களால் தான் லைக்கா உடனே ஒப்பந்தம் போட்டு அறிவிப்பையும் வெளியிட்டு விட்டனர்.

இப்படித்தான் இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. மேலும் இப்படத்தில் வளர்ந்து வரும் கலைஞர்கள் உட்பட முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைய இருப்பதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. அந்த வகையில் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே ஜேசன் சஞ்சய் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளார்.

Also read: நண்டு சிண்டெல்லாம் இயக்குனராகுது, நம்ம மட்டும் இப்படியே இருக்கோமே.. ஜேசன் சஞ்சய்யை பார்த்து ஆதங்கப்படும் விஷால்

Trending News