புதன்கிழமை, ஜனவரி 15, 2025

GV Prakash: கசந்து போன 11 வருட திருமண வாழ்க்கை.. ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்துக்கான காரணம் இதுதான்

GV Prakash: இன்று காலை முதலே சோசியல் மீடியா மிகுந்த பரபரப்பாக இருக்கிறது. இதற்கு காரணம் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் தங்களுடைய விவாகரத்து அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

அதில் மன அமைதிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளோம். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையை காத்துக் கொண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் 12 வருட காதல் 11 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக இந்த செய்தி மீடியாவில் பரவிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் இது வதந்தியாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இப்போது அதிகாரப்பூர்வமான அறிக்கை வந்துள்ளது வருத்தத்தை கொடுத்துள்ளது.

ஜிவி பிரகாஷ், சைந்தவியின் விவாகரத்து

மேலும் இந்த முடிவுக்குக்கான காரணம் என்ன என்று பார்க்கையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி ஜிவி பிரகாஷ் நடிகைகளுடன் நெருக்கமாக நடித்தது சைந்தவிக்கு பிடிக்கவில்லை.

அது மட்டுமின்றி சில நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுவும் வந்திருக்கிறது. அதேபோல் ஜிவி பிரகாஷ் சிலருடன் நட்பாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் வந்திருக்கிறது.

அதை அடுத்து ஆறு மாதமாக இவர்கள் பிரிந்து தான் இருந்திருக்கிறார்கள். குடும்பத்தினர் இருவரின் முடிவை மாற்ற முயற்சிகள் செய்தும் கூட பலனளிக்காமல் போய்விட்டது.

கடந்த திருமண நாளின் போது தான் சைந்தவி தன் காதல் கணவர் குறித்து நீண்ட பதிவு ஒன்றை போட்டிருந்தார். ஆனால் அடுத்த திருமண நாள் வருவதற்கு முன்பாகவே இவர்கள் பிரிந்து விட்டனர்.

இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை இருக்கிறது. அதற்காகவாவது இருவரும் சேர்ந்து வாழ்ந்து இருக்கலாமே என்ற ஆதங்கம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Trending News