நாம் தமிழர் சீமானுக்கு ஆட்டம் காட்டும் தளபதி.. ரஜினியுடன் திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன.?

Vijay-Rajini-Seeman: தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பாகி உள்ளது. இதற்கு விஜய் ஒரு காரணம் என்பதை மறுக்க இயலாது. 2026 தேர்தலை இலக்காக கொண்டிருக்கும் அவர் தற்போது அடுத்த கட்ட அரசியல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

அதேபோல் சமீபத்தில் அவர் நடத்திய மாநாடு ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அனைத்து கட்சிகளும் இப்போதிலிருந்து தேர்தலுக்கான வேலைகளை விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளனர்.

இதில் நாம் தமிழர் கட்சி தான் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. அதுவும் மாநாட்டிற்கு முன்பு விஜய்யை ஆதரித்து பேசிய இவர்கள் தற்போது அவரை எதிர்க்க தொடங்கி விட்டனர்.

அதிலும் சீமான் எந்த மேடையில் ஏறினாலும் விஜய் குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதனால் சோசியல் மீடியாவே இப்போது அல்லோலப்பட்டு வருகிறது. அதில் தற்போது மற்றொரு கண்டன்டும் கிடைத்திருக்கிறது.

ரஜினி சீமான் திடீர் சந்திப்புக்கான காரணம்

அதாவது நேற்று சீமான் ரஜினியை அவருடைய இல்லத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் வரை பேசி இருக்கிறார். அந்த போட்டோ தற்போது வெளிவந்துள்ள நிலையில் எதற்கு இந்த திடீர் சந்திப்பு என்ற கேள்வியும் முளைத்துள்ளது.

ஏனென்றால் ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னபோது அவரை கடுமையாக விமர்சித்தவர் தான் சீமான். அவருடைய கட்சியை சேர்ந்தவர்களும் ரஜினியை மட்டுமல்லாது அவருடைய குடும்பத்தையே தரக்குறைவாக பேசிய வீடியோக்கள் கூட இப்போது வைரலாகி வருகிறது.

இப்படி எல்லாம் பேசிவிட்டு தற்போது எதற்காக சூப்பர் ஸ்டாரை சந்திக்க வேண்டும். விஜய்யை எதிர்ப்பதற்காக இந்த நாடகமா என ரசிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது தான். அவர்கள் இருவரும் சினிமா குறித்து பல விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது தற்போது அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment