செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

காதலரின் சந்தேகத்தால் பறிபோன நிம்மதி.. நடிகையின் திடீர் திருமணத்திற்கு இப்படி ஒரு காரணமா.!

Gossip: சேச்சி நடிகை இப்போது பிஸியாக மாறி இருக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து வந்த இவர் இப்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது ஒரு படத்தில் நடித்து முடித்துள்ள அவர் அதில் இதுவரை இல்லாத அளவுக்கு தாராளம் காட்டி நடித்திருக்கிறாராம். அம்மணி இப்படி ஓப்பன் ஆக நடித்ததில் ரசிகர்கள் கிறங்கித்தான் போயிருக்கின்றனர்.

இதனால் நடிகைக்கு சில வாய்ப்புகளும் வீடு தேடி வந்து கொண்டிருக்கிறது. இப்படி கேரியரின் உச்சத்தில் இருக்கும் அவர் திடீரென திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தது அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக இருக்கிறது.

திருமணத்திற்கு தயாரான நடிகை

ஆனால் விசாரித்து பார்த்ததில் நடிகை வீட்டில் கொடுத்த குடைச்சல் தாங்காமல் தான் இதற்கு ஓகே சொல்லி இருக்கிறாராம். நீண்ட நாள் நண்பரை காதலித்து வரும் நடிகை அதை வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார்.

தற்போது முன்னணி அந்தஸ்தை அடைந்திருக்கும் இவர் ஒரு நடிகருடன் எக்குத்தப்பாக கிசுகிசுவில் சிக்கிவிட்டார். தொடர்ந்து அது பூதாகரமாக வெடித்த நிலையில் காதலர் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.

திருமணம் செய்தால் இந்த பேச்சு எல்லாம் வராது என்று நடிகையை கட்டாயப்படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் முடியாது என்று சொல்ல நிலையில் அப்ப அந்த நடிகருடன் உனக்கு தொடர்பு இருக்கா என நேரடியாகவே கேட்டுவிட்டாராம்.

இப்ப கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னா பிரேக் அப் தான் என சென்டிமென்ட் ஆக லாக் செய்து இருக்கிறார். இதனால் பயந்து போன நடிகையின் குடும்பம் உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். நடிகையும் வேறு வழியில்லாமல் சம்மதித்து விட்டாராம்.

Trending News