2024 Hit Movies: கடந்த வருடம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை எதிர்பார்த்த பெரிய பட்ஜெட் படங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தது. அதிலும் வருடம் ஆரம்பித்த முதல் 4 மாதங்கள் சோதனை தான்.
மே மாதத்தில்தான் அரண்மனை 4 படம் வெளிவந்து தமிழ் சினிமாவை மீட்டெடுத்தது. அதை அடுத்து கருடன், மகாராஜா, ராயன், லப்பர் பந்து, அமரன் ஆகிய படங்கள் வரவேற்பு பெற்றன.
ஆனால் டாப் ஹீரோக்களின் படங்களான இந்தியன் 2, கங்குவா ஆகிய படங்கள் வரவேற்பு பெறவில்லை. அதேபோல் சோசியல் மீடியா ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறியது.
அப்படித்தான் வேட்டையன், கோட் ஆகிய படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது. அந்த வகையில் கடந்த வருடம் 231 படங்கள் வெளியாகி இருக்கிறது.
2024ல் தடுமாறிய கோலிவுட்
ஆனால் வெற்றி என பார்த்தால் வெறும் 18 படங்கள் தான். மேலும் கடந்த வருடம் மட்டும் தயாரிப்பாளர்கள் 3000 கோடிக்கு மேல் செலவு செய்திருக்கின்றனர்.
ஆனால் லாபம் என்று பார்த்தால் மொத்தமாக ஆயிரம் கோடி தான் வந்திருக்கிறது. இது கடும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
அது மட்டும் இன்றி இதற்கு காரணம் என்ன? கோலிவுட் எங்கு தடுமாறியது? என்ற விவாதங்களும் இப்போது தொடங்கியுள்ளது.
இதில் பெரும்பாலானோர் சொல்லும் கருத்து திரைக்கதை தான். அதிகபட்ச வன்முறை முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் ஆகியவை தான் தோல்விகளுக்கு காரணம்.
அதேபோல் ஓவர் ஹீரோயிசம், எதார்த்தத்தை மீறிய காட்சிகள், ஹீரோக்களின் உச்ச பட்ச சம்பளம், படத்தின் நீளம், பிரமோஷன் அலப்பறைகளும் மிக முக்கிய காரணமாக உள்ளது.
இந்த தவறுகளை இந்த வருடம் செய்யாமல் தயாரிப்பாளர்கள் சுதாரித்துக் கொண்டால் நல்லது. இல்லை என்றால் தமிழ் சினிமா போக போக ஆட்டம் காணவும் வாய்ப்பு உள்ளது.