வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பணத்தாசையால் வெறும் போஸ்டரை வைத்து கடனாளியான கௌதம் மேனன்.. ஒரே படத்தால் முடியும் கேரியர்

Director Gautham Menon: தமிழ் சினிமாவிற்கு முக்கியமான காதல் படங்களை கொடுத்த ரொமான்டிக் இயக்குனர் கௌதம் மேனன், சமீப காலமாகவே டாப் நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டிக்கொண்டு இருக்கிறார். இப்பேற்பட்ட கௌதம் மேனனுக்கு எதற்கு இந்த தேவையில்லாத பணத்தாசை என்று தெரியவில்லை. 

வெறும் போஸ்டரை மட்டுமே வைத்துக் கொண்டு இப்போது கடனாளியாக மாறிவிட்டார். அதிலும் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் நாளை தான் ரிலீஸ் ஆகப்போவதாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கும் இப்போது வழி இல்லாமல் போனது. பைனான்சியல் பிரச்சினை காரணமாக இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று இப்போது உச்சநீதிமன்றமே  அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இந்த ஒத்த படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்து மறுபடியும் இயக்குனராக கொடிகட்டி பறந்து விடலாம் என கௌதம் மேனன் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனா இப்ப மொத்த சோலியுமே முடிஞ்சிடுச்சு. ரொம்ப நாட்களாகவே கௌதம் மேனன் பெரிய நடிகர்களை வைத்து படங்களை எடுக்கப் போவதாக போஸ்டர் மட்டுமே அறிவித்து, அந்த படங்களுக்கு கடன் வாங்குகிறார். 

Also Read: ரஜினி முதல் தனுஷ் வரை ரிஜெக்ட் செய்த கதை.. 4 பெரிய ஹீரோக்களை தாண்டி விக்ரமுக்கு வந்த பட வாய்ப்பு, ஜெயிப்பாரா?

 கௌதம் மேனன் கடனாளியானதற்கு இதான் காரணம்

அந்த படத்தை எடுத்த பாடில்லை, கடனையும் கட்டுவதில்லை. அதற்குள் இன்னொரு நடிகரை வைத்து படத்தை ஆரம்பிப்பார், அது இவருக்கு பிரச்சனை ஆகி கடனாளியாக முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. விஜய்யை வைத்து ஒரு படம், சிம்புவை வைத்து ஒரு படம், சூர்யாவை வைத்து ஒரு படம் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதை எல்லாம் அவர் எப்ப தான் எடுப்பாரு, அது என்ன படம், எப்போ ஆரம்பித்தார் என ஒரு விவரமும் தெரியாது. இப்படியே செய்து கொண்டிருப்பதால் தான் அவரால் ஒழுங்கா ஒரு படத்தை கூட டைரக்ட் பண்ண முடியாத சூழல் நிலவுகிறது. சென்னையில் ஒரு மழைக்காலம், யோஹன் அதிகாரம் ஒன்று, துருவ நட்சத்திரம், நதிகளிலே நீராடும் சூரியன், சூர்யாவை வைத்து ஒரு படம் என இவர் ஆரம்பித்த படங்கள் இழுப்பறியில் இருக்கிறது.

இதில் துருவ நட்சத்திரத்தை பல போராட்டங்களில் மத்தியில் நாளை ரிலீஸ் செய்யும் முடிவில் இருந்தனர். ஆனால் இப்போது அதற்கும் ஆப்பு வைத்து விட்டனர். நாளை காலை 10 மணிக்குள் 2 கோடியை ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் திருப்பித் தந்தால் மட்டுமே துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று  தற்போது ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Also Read: பல கோடி செட்டில்மெண்ட், அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்.. துருவ நட்சத்திரத்திற்கு வச்ச ஆப்பு

Trending News