ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Aranmanai 4: தியேட்டருக்கு படையெடுக்கும் ஃபேமிலி ஆடியன்ஸ்.. அரண்மனை 4 வெற்றிக்கான ஆறு காரணங்கள்

Aranmanai 4: சோசியல் மீடியாவை திறந்தாலே அரண்மனை 4 படம் பற்றிய ஆரவாரம் தான் அதிகமாக இருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான இப்படத்திற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஃபேமிலி ஆடியன்ஸின் வரவும் தியேட்டரில் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இயக்குனர் கோலிவுட்டை மீட்டெடுத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் அரண்மனை 4 வெற்றிக்கான காரணங்களை பற்றி இங்கு காண்போம். அதில் முதல் காரணம் சுந்தர் சி மட்டுமே.

அரண்மனை 4 வெற்றியின் ரகசியம்

பொதுவாக இவருடைய படங்களில் கலகலப்புக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது. அதே போல் முகம் சுளிக்க வைக்கும் எந்த காட்சியும் இல்லாத வகையில் குடும்ப ஆடியன்ஸை கவர்ந்து விடும்.

இதுதான் அவரிடம் இருக்கும் ஒரு தனித்துவம். அது அரண்மனை 4ல் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அதேபோல் படத்தில் க்ரிஞ்ச் பாடல்கள் மற்றும் காதல் காட்சிகள் கிடையாது.

புதுமையான கான்செப்ட்டைப் பிடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டார். அதில் தமன்னாவின் நடிப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். கிளாமர் குயினாக பார்த்தவரை நடிப்பில் மிளிர வைத்துவிட்டார் சுந்தர் சி.

ஃபார்முக்கு வந்த சுந்தர் சி

அதேபோல் கோவை சரளா, யோகி பாபு ஆகியோரின் காமெடி, விசுவல் காட்சிகள் என அனைத்தும் சிறப்பாக உள்ளது. அதில் கிளைமாக்ஸ் மற்றும் அதற்கு முன்பான காட்சி புல்லரிக்க வைத்து விட்டது.

அதேபோல் சிம்ரன், குஷ்பூ வரும் பாடலும் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஹிப் ஹாப் ஆதியின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இப்படி இப்படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆக மொத்தம் சுந்தர் சி அரண்மனை 4 மூலம் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார். அதேபோல் தமிழ் சினிமாவும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல வெற்றியை ருசித்துள்ளது.

Trending News