
Ajith-Dhanush: ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் படம் தான் இட்லி கடை. நித்யா மேனன், அருண் விஜய் என பலர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 10ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. அதே நாளில் தான் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியின் குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆகிறது.
இதுவே சினிமா வட்டாரத்தில் ஒரு ஆர்வம் கலந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் குட் பேட் அக்லி டீசர் வெளியானதுமே ஒரு சலசலப்பு இருந்தது.
ஏனென்றால் எதிர்பார்த்ததை விட டீசர் பக்காவாக இருந்தது. இதனால் இட்லி கடை நிலை திண்டாட்டம் தான் என வெளிப்படையான கருத்துக்கள் கிளம்பியது.
இட்லி கடை ரிலீஸ் தள்ளி போக என்ன காரணம்.?
அதற்கேற்றார் போல் படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது. இதனால் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாது. அஜித்தின் படத்தை தனுஷ் இயக்கப் போகிறார்.
அதனால் போட்டி போட மாட்டார் என்றும் செய்திகள் கசிந்தது. இந்த சூழலில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இட்லி கடை ரிலீஸ் தள்ளி போனதுக்கு என்ன காரணம் என தெரிவித்துள்ளார்.
அதாவது படத்தின் ஷூட்டிங் 10 சதவீதம் பாக்கி இருக்கிறது. அதற்கு அனைத்து நடிகர்களின் கால்ஷீட் தேவைப்படுகிறது. அதில் சிறு சிக்கல் இருக்கிறது.
எப்படியும் விரைவில் ஷூட்டிங் முடிந்துவிடும். இந்த காரணத்தினால் தான் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற தேதி இன்னும் 10 நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். ஆக ரெட் டிராகன் AK சோலோவாக சம்பவம் செய்யப் போகிறார்.