Lokesh-Thalaivar 171: விஜய், லோகேஷ் கூட்டணியின் லியோ வெளி வருவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் தலைவர் 171 படம் பற்றிய அப்டேட்டும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த காம்போ சமீபத்தில் உறுதியான நிலையில் இப்படம் LCU-ல் சேருமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
அந்த வகையில் லியோ படத்தை பிரமோஷன் செய்யும் வகையில் பல சேனல்களுக்கும் பிஸியாக பேட்டி கொடுத்து வரும் லோகேஷ் இந்த ரகசியத்தை உடைத்துள்ளார். அதாவது தலைவர் 171 எல்.சி.யு கிடையாது என்றும் இது முற்றிலும் மாறுபட்ட தனித்துவமான படம் என்றும் அவர் கூறியிருப்பது ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் லோகேஷின் படங்கள் ஆக்சன், கேங்ஸ்டர் என ரணகளமாகத்தான் இருக்கும். ஆனால் அவர் ரஜினிக்காக புது அஸ்திரம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். இதுவரை நான் இயக்கிய படங்கள் போல் இல்லாமல் இது அவருக்காகவே உருவான கதை. நீண்ட நாட்களாக இப்படி ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.
சரியான சமயத்தில் அது ரஜினி சாரிடம் சென்று விட்டது என லோகேஷ் அந்த பேட்டியில் கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் 20 நிமிடங்கள் மட்டுமே நான் இந்த கதையை சொன்னேன். உடனே அவர் சந்தோஷத்துடன் கலக்கிட்ட கண்ணா என்று வாழ்த்தியதாக கூறிய லோகேஷ் படம் அடுத்த வருடம் மார்ச் இறுதிக்குள் தொடங்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க எதற்காக இந்த கதை தனித்துவமாக வர இருக்கிறது என்ற ஒரு கேள்வியும் சினிமா விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது. உண்மையில் ரஜினி வெற்றியோ தோல்வியோ அது தன்னால் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அது மட்டுமல்லாமல் லோகேஷ் பிராண்ட் இதில் வரக்கூடாது என்றும் கண்டிஷனாக சொல்லிவிட்டாராம்.
அதன் காரணமாகவே இப்படம் மாறுபட்ட முறையில் உருவாக இருக்கிறது. சென்னையை சுற்றி படமாக்கப்படும் இந்த கதை நிச்சயம் எனக்கு புது பரிசோதனையாக இருக்கும் என்று கூறிய லோகேஷ் ரசிகர்களும் அதை விரும்புவார்கள் என தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் லோகேஷ் என்ற பிராண்ட் இல்லாமல் ஒரு வெற்றியை நிலை நாட்ட ரஜினி விரும்புகிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.