சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவனத்தை பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மேலும் இப்படத்தின் பிரமோஷனுக்காக சிவகார்த்திகேயன் நிறைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அப்போது சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் தோல்விக்கான காரணத்தை மனம் திறந்து பேசி உள்ளார். அதாவது சீமராஜா படத்தை பொருத்தவரையில் இது எந்த மாதிரியான படம் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளவில்லை.
Also Read :பல வருடமாக கிடப்பில் இருக்கும் பிரம்மாண்ட படம்.. இந்த தடவையும் வராது எனக் கூறிய சிவகார்த்திகேயன்
அதுமட்டுமின்றி நாங்களும் அதை சரியாக கொண்டு போய் சேர்க்கவில்லை. ஏனென்றால் சீமராஜா படத்திற்கு முன்பு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்று இதுவும் முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும் என ரசிகர்கள் கணித்து வந்தார்கள்.
மேலும் சீமராஜா படத்தில் பிளாஷ்பேக் காட்சிக்கு செல்லும் போது அதற்கான காரணத்தை வலுவாக சொல்லி இருக்க வேண்டும். ஏனென்றால் கடம்பவேல் ராஜாவின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு வலுவான சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே மக்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தும்.
Also Read :களத்தில் இறங்கும் உலகநாயகன்.. விஜய்யுடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்
அந்த வாரிசு கோழையாக இருந்து பின்பு தனது குடும்பத்தை பற்றி புரிந்து கொண்டு வீரனாக காட்ட வேண்டும். ஆனால் படம் ஓப்பனிங் சீனிலேயே பைட் சீன் தான் இருக்கும். மேலும் நானும், சூரியும் நிறைய காமெடி படங்கள் பண்ணி உள்ளோம். அதேபோல் இந்த படத்தில் இன்னசென்ட் காமெடி ட்ராக் மிகக் குறைவு.
இவ்வாறு படத்தில் சில குறைகள் இருந்ததால் படம் தோல்வி அடைந்ததாக என்னுடைய கணிப்பு என சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். சிவகார்த்திகேயன் சொன்னதும் சரிதான் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒருவேளை சிவகார்த்திகேயன் கணிப்பு படி படம் எடுத்திருந்தால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.
Also Read :எல்லாமுமாய் இருந்தவரை நம்ப வைத்து கழுத்தறுத்த சிவகார்த்திகேயன்.. காற்றில் பறந்த வாக்குறுதி