வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஞ்சலி-ஜெய் லிவிங் டு கெதர் முறிவிற்கு இதுதான் காரணம்.. பகிரங்கமாக போட்டு உடைத்த பிரபலம்

எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த போது ஜெய், அஞ்சலி இருவரும் நெருங்கி பழகத் தொடங்கினார்கள். அதை தொடர்ந்து சில திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கும் இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் காதல் பறவைகளாக சுற்றி திரிந்தனர். இது பற்றி மீடியாக்களில் பல செய்திகள் வெளி வந்தாலும் சம்பந்தப்பட்ட இவர்கள் இருவரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

ஆனாலும் இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் ஒரே வீட்டில் தங்கியது திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் தெரியும். இப்படி உருகி உருகி காதலித்து வந்த இவர்கள் இருவரும் தற்போது ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்ன என்பதை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

Also read: குடும்பத்தோடு பார்க்க முடியாத 6 வெப் சீரிஸ்.. எல்லையை மீறிய ஜெய்-வாணி போஜன் 18+ மோசமான காட்சிகள்

அதாவது ஜெய்க்கு நண்பர்கள் வட்டம் கொஞ்சம் அதிகம். அதன் காரணமாக பார்ட்டி போன்ற இடங்களுக்கு செல்வது, அதிகமாக குடிப்பது என்று அவர் பொழுதை கழித்திருக்கிறார். ஆரம்பத்தில் இதை கண்டித்து வந்த அஞ்சலி பிறகு இவர் திருந்த மாட்டார் என்று புரிந்து கொண்டு தன் காதலை பிரேக் அப் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் தெலுங்கு திரை உலகில் கவனம் செலுத்த ஆரம்பித்து அங்கேயே செட்டிலாகி விட்டார்.

இதனால் மனமுடைந்து போன ஜெய் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் இறங்கி வரவே இல்லை. அந்த வகையில் அவருடைய அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் தான் இந்த காதல் முறிவிற்கு காரணம் என பயில்வான் குறிப்பிட்டுள்ளார். இதை அஞ்சலியே கூட ஒரு பேட்டியில் வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். அதில் அவர், நான் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.

Also read: அஞ்சலியை தொடர்ந்து ராம் படத்தில் நடிக்கும் காமெடி நடிகர்.. யாரும் எதிர்பார்க்காத கூட்டணி

ஆனால் அதில் எனக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. இனி மேலும் இதை தொடர முடியாது என்ற காரணத்தால் நாங்கள் பிரிந்து விட்டோம் என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார். ஆனால் அந்த பேட்டியில் அவர் ஒரு இடத்தில் கூட ஜெய்யின் பெயரை கூறவில்லை. ஆனால் அதை பார்த்த பலருக்கும் அவர் யாரை குறிப்பிட்டு பேசுகிறார் என்பது நன்றாகவே தெரிந்தது.

அந்த வகையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்த அஞ்சலி ஜெய்யின் நடவடிக்கையால் தான் காதலை முறித்துக் கொண்டார். தற்போது பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர் விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக உள்ளார். அதே போன்று ஜெய்யும் அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

Also read: வெப் சீரிஸில் அதிக ஆர்வம் காட்டும் பிரபலங்கள்.. பல மடங்கு லாபம் பார்க்கும் அஞ்சலி

Trending News