வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இசைஞானியின் மகள் பவதாரணி மறைவுக்கு இதான் காரணம்.. கண்ணீர் விட்டு கதறும் குடும்ப உறவு

This is the reason for the death of the singer Bhavadharani: தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் தான் இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி. இவர் பல்வேறு பாடல்களை பாடியது மட்டுமல்லாமல், சுமார் பத்து படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று திடீரென்று அவருடைய மறைவு செய்தி வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் ரசிகர்களையும் அதிர்ச்சடைய வைத்துள்ளது. இவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்பதை இளையராஜாவின் உறவினரும் சீரியல் நடிகையுமான ஹாசினி கண்ணீருடன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பவதாரணி 4th ஸ்டேஜ் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் ஹாசினிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் தெரிய வந்ததாம். இதற்காக ஆயுர்வேத சிகிச்சையை பவதாரணிக்கு அளிப்பதற்காக இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர். இப்போதும் தான் மருத்துவர்களும் எல்லா டெஸ்ட்டுகளையும் எடுத்து இப்போதுதான் பவதாரணிக்கு சிகிச்சையை துவங்க திட்டமிட்டு இருந்தார்களாம். 

Also Read: 60 வயதைக் கடந்தும் இசையில் கலக்கும் 4 இசையமைப்பாளர்கள்.. என்றும் இளமையான ராஜா

பாடகி பவதாரணியின் மறைவுக்கு காரணம் இதுதான்

ஆனால் சிகிச்சை துவங்குவதற்கு முன்பே அவர் இறந்து விட்டதாக ஹாஷினி வருத்தத்துடன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல தற்போது ஹாசினி அமெரிக்காவில் இருப்பதால் அவருடைய இறுதி சடங்கிற்கு கூட வர முடியாத நிலையில் இருப்பதாக அவர் வெளியிட்ட வீடியோவில் கண்ணீருடன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

வெறும் 47 வயதான பவதாரணியின் இறப்பால் இப்போது திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ரசிகர்களின் சோகத்தை தன்னுடைய பாடல்களின் மூலமாக மருந்து போட்ட இசைஞானியின் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை கலங்கி நிற்கின்றனர்.

Also Read: இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்.. அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் ஒட்டுமொத்த திரையுலகம்

Trending News