இந்த வருடம் பாலிவுட் திரையுலகம் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. பல கோடி செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் கூட தோல்வி அடைந்தது பலருக்கும் ஆச்சரியம்தான். ஆனால் உண்மையில் இதற்கு பாலிவுட் நடிகர்களின் சில ஆளுமைகளும், அடக்குமுறைகளும் தான் காரணமாக இருக்கிறது.
அதாவது பாலிவுட் திரையுலகின் முக்கிய நடிகர்கள் நாங்கள்தான் சினிமாவில் நம்பர் ஒன் என்ற லெவலில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கலாச்சார சீர்கேட்டில் ஹாலிவுட்டுக்கே நாங்கள்தான் குரு என்ற ரீதியில் படங்களை எடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஷாருக்கானின் பதான் திரைப்பட பாடல் மிகப் பெரும் சர்ச்சையை சந்தித்தது.
Also read: 2 வருடம் கழித்து சுஷாந்த் சிங் மரணத்தில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்.. கொல நடுங்க வைத்த வாக்குமூலம்
அந்த வகையில் கலாச்சாரத்தையும் 15 முதல் 18 வயது வரை இருக்கும் சிறுவர்களையும் மனதளவில் சலனப்படுத்தக்கூடிய அளவில் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க பாலிவுட்டில் கான் மற்றும் கபூர் நடிகர்களின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. அவர்களுடைய பரம்பரைகள் தான் அங்கு முன்னிலை வகித்து வருகின்றனர்.
சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் போன்ற பெருந்தலைகளின் ஆதிக்கம் தான் பாலிவுட்டில் அதிகமாக இருக்கிறது. அதேபோன்று கபூர் நடிகர்களின் வாரிசுகளும் அங்கு தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் அவர்களை எல்லாம் ஓரம் கட்டும் வகையில் சத்தம் இல்லாமல் வளர்ந்து வந்த ஒரு நடிகர் சுஷாந்த் சிங். ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான இவருக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் மிகப்பெரிய அளவில் அடையாளத்தை கொடுத்தது.
அதன் பிறகு இவருடைய மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது. இப்படி முன்னிலையில் இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மர்மமான முறையில் தன் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் பரவியது. இது ஹிந்தி திரையுலகில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி எடுத்தது. இதற்கு கான் மற்றும் கபூர் குடும்பங்களும் அதிர்வலைகளை தெரிவிக்கவில்லை.
ஆனால் இந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு அவருடைய சாவு இயற்கையானது அல்ல, அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்ற செய்தி வெளியாகி உள்ளது. அவருடைய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் வஞ்சகத்தால் கொலை செய்யப்பட்டார் என்று பலரும் கூறி வந்த நிலையில் இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு பாலிவுட்டின் பெரும் புள்ளிகள் தான் காரணம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவ்வாறு ஒருவருக்கொருவர் சப்போர்ட் பண்ணாமல் மற்றவர்களின் வளர்ச்சியை தடுப்பதால் தான் பாலிவுட் இன்று கடும் சரிவை சந்தித்து வருகிறது. இவர்களின் ஆதிக்கத்தாலும், அடக்குமுறையாலும் அநியாயமாக ஒரு நடிகர் பலியாகி இருக்கிறார். இது தற்போது ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also read: சுஷாந்த் சிங்கை போல கொடுமை சந்தித்த டான் பட நடிகர்.. தயாரிப்பாளர் பேட்டியால் பரபரப்பு