திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரின்ஸ் பட தோல்விக்கு இதுதான் காரணம்.. கூட இருந்தே குழிப்பறித்த சம்பவம்

சிவகார்த்திகேயன் இப்போது தான் மாஸ் ஹிட் படங்களை கொடுத்து வந்தார். நெல்சன், சிவகார்த்திகேயனின் கூட்டணியில் வெளியான டாக்டர் படம் நல்ல வசூலை பெற்றது. இதைத்தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் டான்.

இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. இவ்வாறு தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயனுக்கு சருக்களாக அமைந்தது பிரின்ஸ் படம். தமிழ், தெலுங்கு என இந்தப் படம் இரு மொழிகளில் வெளியானது.

Also Read :விலை போகாத படங்களை நேக்காக தள்ளிவிடும் சிவகார்த்திகேயன்.. பிரின்ஸ் படத்தில் பலிக்காமல் போன பாட்சா

பிரின்ஸ் படத்தின் மூலம் ஹட்ரிக் வெற்றி பெறலாம் என்று காத்திருந்த சிவகார்த்திகேயனுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. அதாவது மிக மோசமான தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் சில திரையரங்குகளில் இருந்தே பிரின்ஸ் படத்தை எடுத்து விட்டார்கள்.

பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு காரணம் இப்படம் வெளியான போது திட்டமிட்டு இணையத்தில் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்களை போட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்மறையான கருத்துக்கள் நிலவியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் யார் இந்த வேலையை செய்தார்கள் என தீவிர விசாரணை நடத்தியுள்ளார்.

Also Read :பிரின்ஸ் பட தோல்வியால் மாவீரன் படத்திற்கு என்ன ஆச்சு? பரிதவிக்கும் சிவகார்த்திகேயன்

அப்போது தான் தெரிந்தது அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ள சிலரே அவருக்கு எதிராக இதுபோன்று இணையத்தில் நெகட்டிவ் கமெண்டுகளை பரப்பி உள்ளனர். இவ்வாறு சிவகார்த்திகேயன் கூட இருந்தே சிலர் அவருக்கு குழிப்பறித்துள்ளனர்.

ஆகையால் இவர்களுக்கு தனது வெற்றி படத்தின் மூலம் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் தீவிரம் காட்டி வருகிறாராம். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் மிக விரைவில் தொடங்க உள்ளது.

Also Read :புது அவதாரம் எடுத்து அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி.. தனுஷ், சிவகார்த்திகேயன் போல செய்யபோகும் வேலை

Trending News