வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிம்பு, கௌதம் மேனன் இடையே பிரச்சனைக்கு இதுதான் காரணம்.. VTV2-க்கு வாய்ப்பு இருக்கா?

சிம்பு மாநாடு வெற்றிக்குப் பிறகு வேற லெவலில் உருமாறி இருக்கிறார். அவருடைய அடுத்த அடுத்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வருவதால் அவரது மார்க்கெட் உயரத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி தனது சம்பளத்தையும் சிம்பு இப்போது பல மடங்கு உயர்த்தி விட்டாராம்.

அடுத்ததாக கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் சிம்புவின் நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் சிம்புக்கு ஒரு சரியான திருப்புமுனையை ஏற்படுத்திய படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

Also Read : திருந்தாத சிம்புவால் தயாரிப்பாளர் அனுபவிக்கும் கொடுமை.. எல்லாம் தெரிந்தும் கப்சிப்ன்னு இருக்கும் கமல்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இப்போது வரை இந்த படம் ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கௌதம், சிம்பு கூட்டணியில் அச்சம் என்பது மடமையடா படம் வெளியானது.

அதற்கு அடுத்தபடியாக சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படமும் இதே கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பது போல ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் சிம்புக்கு சரியான மரியாதை கௌதம் மேனன் கொடுக்கவில்லையாம்.

Also Read : காலேஜ் பையனாக மாறிய சிம்பு.. வைரலாகும் நியூ லுக் போட்டோஸ்

இதனால் அவர் மீது சிம்பு அதிருப்தியில் இருந்து உள்ளார். ஆகையால் மனம் இல்லாமல் தான் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்து கொடுத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக சிம்பு பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆனால் சிம்புவின் ரசிகர்கள் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்த சூழலில் மீண்டும் கௌதம் மேனன் உடன் கூட்டணி போட சிம்பு தயாராக இல்லை என்று அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : உயிரை விட துணிந்த சிம்பு பட நடிகை.. ராகுல் காந்தியால் அரசியலில் ஜொலிக்கும் ஹீரோயின்

Trending News