செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

Vishal: அரசியலுக்கே வரல அதுக்குள்ள இவ்வளவு தந்திரமா.? உதயநிதியை விஷால் சீண்டியதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா

Actor Vishal: விஷால், ஹரி கூட்டணியில் உருவான ரத்னம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படத்திற்கு இப்போது முரண்பாடான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது.

அதேபோல் படத்திற்கு சில கட்டப்பஞ்சாயத்துகளும் நடந்தது. அது மட்டுமின்றி விஷால் தேவையில்லாமல் உதயநிதியை சீண்டும் விதமாக பேட்டிகளும் கொடுத்திருந்தார்.

இதை பார்த்து எதற்கு இவர் இப்படி பேசுகிறார் என்ற குழப்பம் அனைவருக்கும் இருந்தது. உண்மையில் இதை அவர் ஒரு பிரமோஷன் யுக்தியாக தான் பயன்படுத்தியிருக்கிறார்.

ஆனாலும் படத்திற்கு அது கை கொடுக்கவில்லை. இந்நிலையில் பட ரிலீசில் எதற்கு அவர் எவ்வளவு ஆர்வம் காட்டினார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

விஷால் செய்த தந்திரம்

அதாவது இப்படத்திற்காக 25 கோடி சம்பளம் அவருக்கு பேசப்பட்டிருக்கிறது. அதில் 10 கோடி மட்டும் போதும் என்று விஷால் சொல்லிவிட்டாராம். மீதி 15 கோடிக்கு வெளியீட்டு உரிமையை எடுத்துக் கொள்கிறேன் என ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.

அதுதான் அவருடைய இந்த பேச்சுக்கு காரணமாக இருக்கிறது. இதன் மூலம் எப்படியாவது படத்தை பரபரப்பாகி கூட்டத்தை வரவைத்து காசு பார்த்து விட பிளான் செய்திருக்கிறார்.

ஆனால் இது அவருக்கு ஆப்பாக முடிந்திருக்கிறது. அதாவது ரத்னம் பட விழாவின்போது இப்படத்திற்கு நான் ஹீரோ மட்டும் தான் என விஷால் கூறியிருந்தார்.

இப்போது வந்திருக்கும் தகவலை பார்த்தால் அவர் எந்த அளவுக்கு பொய் சொல்லி இருக்கிறார் என்பது தெரிகிறது. அது சரி அரசியல்வாதிக்கு இது முக்கியமான தகுதி அல்லவா. இன்னும் அரசியலுக்கே வரவில்லை ஆனால் விஷால் அந்த தந்திரத்தோடு செயல்படுகிறார்.

Trending News