VJ Chithra: விஜே சித்ரா தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று வாய்ப்புக்காக பல நேரங்களில் போராடி இருக்கிறார். ஆனால் அப்பொழுதெல்லாம் இவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அதனால் கிடைத்த வேலையை பார்க்க வேண்டும் என்பதற்காக தொகுப்பாளனியாகவும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார்.
அதன் பிறகு இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 சீரியலில் முல்லை கேரக்டர். ஆரம்பத்தில் இந்த கேரக்டரை பற்றி பெருசாக பேசப்படாத நிலையில் தொடர்ந்து இவருடைய நடிப்பை பார்த்து மக்கள் இவரை கொண்டாடும் அளவிற்கு VJ சித்ரா பெயர் வாங்கி விட்டார்.
நாலா பக்கமும் ரண வேதனையே அனுப்பி வைத்த விஜே சித்ரா
ஆனால் இந்த பெயரும் புகழையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாமல் பாதிலேயே உயிரை மாய்த்துக்கொண்டார். இதற்கு என்ன காரணம் என்று ஒவ்வொருவரும் அவர்களுடைய கருத்துக்களை கூறி வந்தார்கள். ஆனால் சமீபத்தில் இவருடைய நெருங்கிய தோழி ஒருவர் கொடுத்த பேட்டியில் அனைத்து உண்மைகளும் தெரிய வந்திருக்கிறது.
அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 சீரியலில் அதிகமாக மக்களை கவர்ந்தது கதிர் முல்லை ஜோடி தான். அதற்கு காரணம் இவர்களிடையே இருந்த கெமிஸ்ட்ரி தான். இதனால் இதையே வைத்து டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்து விடலாம் என்று டீம் பிளான் பண்ணி விட்டார்கள். அதற்காக ரொம்பவே நெருக்கமாக இருக்கும் காட்சிகள் மற்றும் காதல் வசனங்கள் என்று ஸ்கிரிப்ட் அதிகமாக எழுதப்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இதையெல்லாம் கண்டு கொள்ளாத VJ சித்ரா நிச்சயதார்த்தத்திற்கு பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதாவது ஹேமந்த் என்பவரை காதலித்து கல்யாணம் பண்ணுவதற்கு முடிவெடுத்திருந்தார். இந்த நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு சீரியலிலும் நெருங்கி நடிக்கும் வாய்ப்பு வந்ததால் இவர்கள் இருவர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் VJ சித்ரா, தோழி சரண்யாவிடம் புலம்பி இருக்கிறார். அதாவது கிஸ் பண்ற மாதிரி காட்சிகள் எல்லாம் வந்தால் அவர் என்னுடன் சண்டை போடுகிறார். இதை நான் எப்படி சரி பண்ணுவது என்று தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கு சரண்யா உன்னுடைய வேலை இதுதான் என்பதை வருங்கால கணவருக்கு புரிய வைத்துவிடு.
இல்லை என்றால் கதை எழுதும் பொழுது கொஞ்சம் பார்த்து எழுதுங்க என்று அவர்களிடம் கேளு என சரண்யா சொல்லி இருக்கிறார். அதற்கு VJ சித்ரா, உனக்கு என்னமா சீரியலில் வாய்ப்பு இல்லை என்றால் பத்திரிகையாளராக போய்விடுவாய். எனக்கு அப்படியா இது இல்லையென்றால் என்னுடைய கேரியர் கேள்விக்குறியாகிவிடும். ஒருவேளை நான் அப்படி சொல்லிவிட்டால் அவர்கள் முல்லை கேரக்டருக்கு என்னை தூக்கி விடுவார்கள்.
பிறகு நான் என்ன பண்ணுவது என்று சரண்யாவிடம் கேட்டிருக்கிறார். அப்படி என்றால் உன்னுடைய வேலை சீரியலில் காதலிப்பது போல் பண்ணுவது நடிப்புதான் என்று உன்னுடைய வருங்கால கணவர் ஹேமந்திடம் விளக்கி சொல்லு என்று சரண்யா சொல்லி இருக்கிறார். அதன் பிறகு தான் ஹேமந்துக்கும் சித்ராவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் ரண வேதனையை அனுபவித்து இருக்கிறார்.
கடைசியில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தற்கொலை செய்து இருக்கிறார். ஒருவேளை ஹேமந்த் இவரைப் பற்றி புரிந்திருக்க வேண்டும் அல்லது பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் பொழுது என்னால் இவ்வளவு தான் முடியும் என்று ஒரு தெளிவான முடிவை எடுத்திருக்க வேண்டும். அந்த இக்கட்டான சூழ்நிலையில் சரியான முடிவை எடுக்க முடியாமல் பரிதாபமாக உயிரை மாய்த்துக் கொண்டார்.