சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

3வது முறையாக ஹார்ட் டிஸ்க்கை தொலைக்கும் லைக்கா.. ஐடிக்கு பயப்படாத சுபாஷ்கரனுக்கு வந்த பயம்

Lyca Productions: லைக்கா நிறுவனம் இப்போது இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதில் இந்தியன் 2 ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அதேபோல் சூப்பர் ஸ்டாரின் வேட்டையனும் பரபரப்பாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட விடா முயற்சி இன்னும் தத்தளித்து வருகிறது.

இப்படத்திற்கு அடுத்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படமே பொங்கலுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் விடாமுயற்சியின் நிலை தான் கேள்விக்குறியாக இருக்கிறது.

இதனால் நொந்து போன ரசிகர்களும் லைக்காவை காணவில்லை என போஸ்டர் அடிக்கும் அளவுக்கு வந்து விட்டார்கள். அதனாலயே தற்போது தயாரிப்பு தரப்பு காதில் பூ சுற்றும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள்.

காணாமல் போன ஹார்ட் டிஸ்க்

அதாவது விடாமுயற்சி படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது. அதனாலேயே படப்பிடிப்பு தாமதமாகிறது என்ற காரணம் தற்போது சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த காரணம் முதல் முறை கிடையாது. இப்படி தான் 2.O படப்பிடிப்பின் போதும் சொன்னார்கள். அதை தொடர்ந்து லால் சலாம் படம் தோல்வி அடைந்த பிறகு ஐஸ்வர்யா ஹார்ட் டிஸ்க் காணவில்லை என கூறினார்.

இப்போது மூன்றாவது முறையாக விடாமுயற்சிக்கும் இதே காரணத்தை லைக்கா சொல்கிறது. உண்மையில் திட்டமிட்டபடி படத்தை முடிக்க முடியவில்லை.

ஆனால் அதை சொல்லி பெயரை கெடுத்துக்க விரும்பாமல் லைக்கா இப்படி ஒரு உருட்டை உருட்டி இருக்கின்றனர். ஐடிக்கு கூட பயப்படாத தயாரிப்பாளர் ரசிகர்களுக்கு பயந்து இப்படி இறங்கிவிட்டாரே.

Trending News